அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு ஏப்ரல் 2ம் தேதி அமலுக்கு வர உள்ளது. இது அமலுக்கு வந்தால் சர்வதேச அளவில் வர்த்தக போர் மற்றும் பதட்டங்கள் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி படைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியது.
இதனையடுத்து ஹவுதிக்கள் திருப்பி தாக்குவோம் என்று அறிவித்தனர் இதனால் போர் பதட்டம் ஏற்பட்டது இது போன்ற காரணங்களால் இதனால் இந்த வாரம் (மார்ச் 17-21) பங்குச் சந்தைகளில் வர்ததகம் எப்படி இருக்குமோ என்ற பயம் முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் இந்த வாரம் பங்குச் சந்தைகள் அதிரி புதிரி ஏற்றத்தை சந்தித்தன. கடந்த 5 வர்த்தக தினங்களிலும் இந்திய பங்குச் சந்தைகளில் தொடர்ந்து ஏற்றத்தை மட்டுமே சந்தித்தன. இந்திய பங்குச் சந்தைகள் இந்த வாரம் தலா 4 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.
கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்த இந்த வார பங்கு வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 3,076.60 புள்ளிகள் அல்லது 4.17 சதவீதம் உயர்ந்து 76,905.51 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 4.26 சதவீதம் அல்லது 953.20 புள்ளிகள் ஏற்றம் கண்டு 23,350.45 புள்ளிகளில் முடிவுற்றது. 2021 பிப்ரவரிக்கு பிறகு, தற்போதுதான் இந்திய பங்குச் சந்தைகள் ஒரே வாரத்தில் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளன. மேலும் இந்த வாரத்தில் மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் இன்டெக்ஸ் முறையே 7.27 சதவீதம் மற்றும் 8.14 சதவீதம் ஏற்றம் கண்டது. இந்திய பங்குச் சந்தைகளின் இந்த ஏற்றத்துக்கு பின்னணியில் உள்நாட்டு மற்றும் சர்வதேச நிலவரங்கள் உள்ளன.
கடந்த பிப்ரவரி மாதத்தில் நாட்டின் சில்லரை விலை பணவீக்கம் 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.61 சதவீதமாக குறைந்தது. இந்திய ரிசர்வ் வங்கி சில்லரை விலை பணவீக்கத்தை 2 முதல் 4 சதவீத வரம்பிற்குள் வைத்திருக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது பணவீக்கம் குறைந்து வருவதால் எதிர்வரும் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை குழு கூட்டத்தில் முக்கிய கடனுக்கான வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற எதிர்ப்பார்ப்பை தூண்டியது. கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 8 மாதங்களில் இல்லாத அளவுக்கு 5.01 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது. 2024 டிசம்பரில் நாட்டின் தொழில்துறை உற்பத்தி வளர்ச்சி 3.54 சதவீதம் என்ற அளவில்தான் இருந்தது.
இந்த இரண்டு புள்ளிவிவரங்கள் கடந்த வாரமே வெளிவந்தபோதிலும், இந்த வார பங்கு வர்த்தகத்திலும் அவற்றின் தாக்கம் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே சில்லரை விலை பணவீக்கம் மற்றும் தொழில்துறை உற்பத்தி குறித்த புள்ளிவிவரங்களில் இந்த வாரம் பங்குச் சந்தையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தின. இந்த வார தொடக்கத்தில் சீனாவின் நுகர்வு வளர்ச்சி தரவு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்ததது. இதனால் ஆசிய பங்குச் சந்தைகள் அனைத்தும் உயர்ந்தன. இந்திய பங்குச் சந்தைகளும் அதன் பலனை அனுபவித்தது. அமெரிக்க பெடரல் வங்கியின் கூட்டம் தொடர்பான எதிர்பார்ப்புகளும் இந்திய பங்குச் சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
அமெரிக்க பெடரல் வங்கி தற்போதைய கூட்டத்தில் வட்டி விகிதத்தில் மாற்றங்கள் எதுவும் செய்யவில்லை. அதேசமயம், அமெரிக்க பெடரல் வங்கியின் தலைவர் ஜெரோம் பவல், இந்த ஆண்டில் வட்டி குறைப்பு இருக்கும் என்று என்பதை சுட்டி காட்டினார். இந்த ஆண்டு 2 முறை வட்டி விகிதத்தை குறைக்கலாம் என்ற அமெரிக்க பெடரல் வங்கி கணிப்பு முதலீட்டாளர்களின் உணர்வை உயர்த்தியது. இதனையடுத்து சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் உயர்ந்தன. இதனால் இந்திய பங்குச் சந்தைகளும் ஊக்கம் பெற்றன. அடுத்ததாக, பல மாதங்களாக இந்திய பங்குச் சந்தைகளை புறக்கணித்து வந்த அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைகள விரும்ப தொடங்கி விட்டனர்.
இந்த ஆண்டில் இந்திய பங்குச் சந்தைகளில் பங்குகளை அதிகளவில் விற்பனை செய்து வந்த அன்னிய முதலீட்டாளர்கள் தற்போது இந்திய பங்குகளில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்ட தொடங்கி உள்ளனர். இந்த வாரம் கடந்த செவ்வாய் மற்றும் புதன் ஆகிய நாட்களில் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் நிகர வாங்குபவர்களாக இருந்தனர். அதாவது பங்குளை விற்பனை செய்ததை காட்டிலும் பங்குகளை வாங்கியது அதிகமாகும். இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ரூ.1,462 கோடிக்கும், கடந்த வியாழக்கிழமையன்று ரூ.3,239 கோடிக்கும் பங்குகளை வாங்கினர். இந்த ஆண்டில் இதுவரை அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் ரூ.1.4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் தலைமை முதலீட்டு மூலோபாய நிபுணர் விகே விஜயகுமார் கூறுகையில், ரொக்க சந்தையில் இரண்டு நாட்களில் அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கியதும், ஒரு வேளை முக்கியமாக, அவர்களின் குறுகிய நிலைகளில் (short positions) கூர்மையான சரிவு மற்றும் எதிர்கால சந்தையில் நீண்ட நிலைகளில் (long positions) அதிகரிப்பும் பங்குச் சந்தைகளின் ஏற்றத்தின் முக்கிய இயக்கியாக இருந்திருக்கும் என்று தெரிவித்தார். பங்குகளுக்கான ஒட்டு மொத்த மதிப்பீடு கணிசமாக குறைந்தது மேலும் முதலீட்டாளர்கள தரமான பங்குகளை வாங்க தொடங்கினர் இதுவும் பங்குச் சந்தையின் ஏற்றத்துக்கு காரணமாக இருந்தது.
அதேசமயம், உள்நாட்டு முதலீட்டாளர்கள் இந்த ஆண்டு பங்குச் சந்தையின் ஒவ்வொரு சரிவிலும் பங்குகளை வாங்குவதற்கு துணிச்சலுடன் இருந்தனர். அமெரிக்காவுடனான வர்த்தக போரினால் இந்தியாவிற்கு குறைவான தாக்கம் (பாதிப்பு) இருக்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இது போன்ற காரணங்களால் இந்த வாரம் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் களை கட்டியது. கவர்ச்சிகரமான மதிப்பீடுகள், பொருளாதார மீட்சிக்கான அறிகுறிகள் மற்றும் அன்னிய முதலீட்டாளர்கள் மீண்டும் இந்திய பங்குச் சந்தைக்கு திரும்பியது ஆகியவற்றை குறிப்பிட்டு, இந்திய பங்குச் சந்தைகளின் மோசமான காலம் முடிந்து விட்டது என்று பல நிபுணர்கள் தெரிவித்தனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!



Click it and Unblock the Notifications