நேற்று ஒரே நாளில் 1,066 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது சென்செக்ஸ் இண்டெக்ஸ். அடுத்தடுத்து சென்செக்ஸ் சரியப் போகிறது போல என பயந்து கொண்டிருக்கும் போது, மீண்டும் ஏற்றம் கண்டு எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது சென்செக்ஸ்.

நேற்று (15 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 39,728 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 39,936 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.
வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,125 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. வர்த்தக நேர முடிவில், நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 254 புள்ளிகள் ஏற்றம் கண்டு 39,982 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
BSE நிலவரம்
சென்செக்ஸின் 30 பங்குகளில் 24 பங்குகள் விலை ஏற்றம் கண்டன. 06 பங்குகள் இறக்கத்தில் வர்த்தகமாயின. பி எஸ் இ-யில் மொத்தம் 2,811 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,477 பங்குகள் ஏற்றத்திலும், 1,157 பங்குகள் விலை இறக்கத்திலும், 177 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 89 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி பேங்க், அல்ட்ரா டெக் சிமெண்ட், பவர் கிரிட் கார்ப்பரேஷன், கோட்டக் மஹிந்திரா போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாயின. ஹெச் சி எல் டெக்னாலஜி, மஹிந்திரா & மஹிந்திரா, ரிலையன்ஸ், ஏஷியன் பெயிண்ட்ஸ், நெஸ்ட்லே போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாயின.
ஐரோப்பிய சந்தைகள்
இன்று (16 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 1.35 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 1.58 % ஏற்றத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.99 % ஏற்றத்திலும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் தடுமாற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (16 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி & ஸ்ரெய்ட் டைம்ஸ், ஹாங் காங் நாட்டின் ஹேங் செங், சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் இறக்கத்தில் வர்த்தகமாயின. தென் கொரியாவின் கோஸ்பி 0.83 % இறக்கத்தில் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications