மும்பை: பொதுவாக பங்கு சந்தையில் நீண்டகால நோக்கில் யாரும் எதிர்ப்பார்க்காத வருமானத்தை சில பங்குகள் கொடுத்து வருகின்றன. இவ்வளவு வருமானம் கூட கிடைக்குமா? என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், இது உண்மை தான்.
அந்த வகையில் தீபக் நைட்ரேட் பங்கானது கடந்த 5 வருடங்களில் 900% வருமானம் கொடுத்துள்ளது.
இப்பங்கின் விலையானது 191 ரூபாயில் இருந்து 2041 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் மட்டும் 968% லாபம் கொடுத்துள்ளது.
11,000% லாபமா?
நீண்டகால நோக்கில் முதலீட்டாளர்கள் மிகப்பெரிய லாபம் கிடைக்க பங்கு சந்தையே சரியான வாய்ப்பு எனலாம். அந்த வகையில் தீபக் நைட்ரேட் பங்கானது கடந்த 10 ஆண்டுகளில்11,000% ஏற்றம் கண்டுள்ளது. இந்த பங்கின் விலையானது 17.94 ரூபாயில் இருந்து 2041 ரூபாயாக ஏற்றம் கண்டுள்ளது.
மிகப்பெரிய காலம்
இந்த பங்கின் 52 குறைந்தபட்ச விலையானது 1682.15 ரூபாயாக உள்ளது. இது கடந்த ஜூலை 1, 2022ல் தொட்டது. இதன் 52 வார உச்ச விலையானது அக்டோபர் 19,2021, 3020 ரூபாயினை தொட்டுள்ளது.
இந்திய கெமிக்கல் துறையை சேர்ந்த பங்கானது, முதலீட்டாளர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய லாபத்தினை கொடுத்துள்ளது.
முக்கிய கெமிக்கல் சப்ளையர்
இந்திய கெமிக்கல் துறை சேர்ந்த நிறுவனங்களுக்கு தேவையானது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இது சிறப்பு கெமிக்கல் சப்ளையில் முக்கிய பங்கு வகிக்கும் சர்வதேச நிறுவனமாகும்.
சீனாவில் சுற்றுசூழல் பிரச்சனைக்கு மத்தியில் சர்வதேச நாடுகளின் கவனமானது இந்தியா மீது திரும்பியுள்ளது.
எல்ஐசி போர்ட்போலியோவில்
எல் ஐ சி நிறுவனம் இந்த பங்கினை தனது போர்ட்போலியோவில் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது முன்னதாக 4.977% ஆக இருந்த நிலையில், தற்போது 5.028% ஆக அதிகரித்துள்ளது. இதில் 0.051% பங்கின் சராசரி விலை 2074.49 ரூபாயாகும். இதனை ஓபன் சந்தை மூலம் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
டெக்னிக்கல் நிலவரம்
இப்பங்கின் சந்தை மதிப்பானது 27,000 கோடி ரூபாயாக உள்ளது. இந்த கெமிக்கல் பங்கின் விலையானது 50 நாள், 100 நாள் மூவிங் ஆவரேஜ்ஜுக்கு மேலாக இருந்து வருகின்றது. இதே 5 நாள், 20 நாள், 200 நாள் மூவிங்க் ஆவரேஜ்ஜுக்கு கீழாக காணப்படுகின்றது.
share update: This chemical stock zoomed over 11,000% in 10 years/அடி தூள்.. 11,000% வருமானம்... 10 ஆண்டுகளில் நல்ல வேற லெவல் வருமானம்.. இதனை இனியும் வாங்கலாமா?
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications