தென் இந்தியாவை தளமாகக் கொண்ட பல்வேறு வணிகங்களை செய்து வரும் ஸ்ரீராம் குழுமம், ரியல் எஸ்டேட் வணிகத்திலும் பிரபலாமன நிறுவனமாக இருந்து வருகின்றது. அதனை ஸ்ரீராம் பிராபர்டீஸ் என்ற பெயரில் செய்து வருகின்றது.
தென் இந்தியாவில் மிக பிரபலமான நிறுவனமாக இருந்து வரும் ஸ்ரீராம் குழுமம், 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இது வீடு, சொகுசு ரக வீடுகள், கம்ரஷியல் பிராபர்டீஸ் உள்ளிட்ட பலவற்றிலும் கவனம் செலுத்தி வருகின்றது.
இன்னும் தெளிவாக சொல்லவேண்டுமெனில் தென் இந்தியாவில் டாப் 5 என்ற இலக்கினில் இருந்து வருகின்றது ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனம். இப்படியொரு நிறுவனம் தான் வரும் வாரத்தில் தனது பொதுப் பங்கு வெளியீட்டினை செய்யவுள்ளது.
ஐபிஓ எப்போது?
ஸ்ரீராம் பிராபர்டீஸின் பொதுப்பங்கு வெளியீடானது டிசம்பர் 8ம் தேதி முதல் டிசம்பர் 10 அன்று முடிவடையவுள்ளது. இதே அதன் ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு டிசம்பர் 7 அன்று தொடங்கவுள்ளது. இதன் பங்கு ஒதுக்கீடு 15 அன்று செய்யப்படவுள்ளது. பங்கு கிடைக்காதவர்களுக்கு டிசம்பர் 16 அன்று பணம் திரும்ப தரப்படவுள்ளது.
எப்போது பங்கு சந்தையில் பட்டியல்
இதே டிசம்பர் 17 அன்று டீமேட்களுக்கு ஒதுக்கப்படலாம். இதனையடுத்து பி.எஸ்.இ மற்றும் என்.எஸ்.இ-யில் டிசம்பர் 20 அன்று பட்டியலிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்கு விலை நிர்ணயம்
ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு விலை நிர்ணயம் 113 - 118 ரூபாயாக செய்யப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பெங்களூர், சென்னை, ஹைத்ராபாத், கொல்கத்தா, கோயமுத்தூர், விசாகபட்டிணம் உள்ளிட்ட நகரங்களில் இந்த நிறுவனம் செயல்பட்டு வருகின்றது.
ஏற்கனவே பல திட்டங்களை முடித்துள்ள நிலையில், இன்னும் பல புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது.
லாட் சைஸ் எவ்வளவு?
முதலீட்டாளர்கள் குறைந்தபட்சம் 125 பங்குகள் ஒரு லாட் ஆக நிர்ணயம் செய்துள்ளனர். இதற்காக 14,750 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதிகபட்சமாக 13 லாட்களை முதலீடு செய்து கொள்ளலாம். இதற்கு அதிகபட்சமாக 1,91,750 ரூபாயாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். சில்லறை முதலீட்டாளர்கள் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்ய அனுமதிக்கப்படலாம்.
யாருக்கு எவ்வளவு?
இந்த பங்கு வெளியீட்டில் புதிய வெளியீடாக 250 கோடி ரூபாயாகவும், 350 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குதாரர்களின் பங்குகளையும், இது தவிர 25 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்யப்படவுள்ளது.
மொத்த பங்கு வெளியீட்டில் 75% தகுதி வாய்ந்த நிறுவனங்களும், 10% சில்லறை முதலீட்டாளர்களுக்கும், 15 நிறுவனம் அல்லாத முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் 3 கோடி பங்குகள் ஊழியர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

டீ குடிக்கிற காசு போதும்!5 வருடத்தில் லட்சாதிபதி ஆக இந்த மேஜிக் கணக்கை பாருங்க!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!



Click it and Unblock the Notifications