சமீபத்திய காலமாக பங்கு சந்தையில் பொதுப் பங்கு வெளியீடு என்பது பெரும் அளவில் அதிகரித்துள்ளது. இதில் சில நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும் முதல் நாளே பெரும் லாபத்தினை அளிக்கின்றன, இதுவே சந்தையில் பெரும் லாபத்தினை பெற சாதகமாக அமைந்துள்ளது.
பொதுவாக பங்கு சந்தையில் ஐபிஓவில் நுழையும் நிறுவனங்கள் ஆரம்பத்தில் குறைந்த விலையில் கிடைக்கும். எதிர்காலத்தில் இதன் மூலம் நல்ல லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.
ஆனால் சில நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடப்படும்போது டிஸ்கவுண்ட் விலையில் பட்டியலிடப்பட்டு வருகின்றன. இது ஐபிஓ சந்தை மீதான நம்பிக்கையை குறைக்கும் விதமாக வந்து கொண்டுள்ளது.
டிஸ்கவுண்ட் விலையில் பட்டியல்
பேடிஎம்-மின் பட்டியலுக்கு பிறகு இந்த பயமானது சற்றே அதிகரித்துள்ளது எனலாம். பேடிஎம் முதல் நாளே பலமான சரிவினைக் கண்ட நிலையில், தற்போது நம்ம ஊரு ஸ்ரீராம் குழும நிறுவனமும் 24% டிஸ்கவுண்ட் விலையில் காணப்படுகின்றது. இது முதலீட்டாளர்கள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.
என்ன வணிகம்
தென் இந்தியாவை தளமாகக் கொணடு பல்வேறு வணிகங்களை செய்து வரும் ஸ்ரீராம் குழுமம், ரியல் எஸ்டேட் வணிகத்திலும் ஈடுபட்டு வருகின்றது. இதை ஸ்ரீராம் பிராபர்டீஸ் என்ற பெயரில் செய்து வருகின்றது. 40 ஆண்டுகளாக இந்த துறையில் செயல்பட்டு வரும் இந்த நிறுவனம், வீடுகள், சொகுசு வீடுகள், கமர்ஷியல் பிராபர்டீஸ் உள்ளிட்ட பலவற்றில் கவனம் செலுத்தி வருகின்றது.
ஐபிஓ வெளியீடு
ஸ்ரீராம் பிராபர்டீஸின் பொதுப்பங்கு வெளியீடானது டிசம்பர் 8ம் தேதி தொடங்கி, டிசம்பர் 10 அன்று முடிவடைந்தது. ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் பொதுப்பங்கு விலை நிர்ணயம் 113 - 118 ரூபாயாக செய்யப்பட்டது. இந்த பங்கு வெளியீட்டில் 4.6 மடங்கு விண்ணப்பம் பெறப்பட்டது. இதன் சந்தை மூலதனமானது 1594 கோடி ரூபாயாக உள்ளது.
பட்டியல் விலை என்ன?
ஸ்ரீராம் பிராபர்டீஸின் பங்கு விலையானது 94 ரூபாயாக பட்டியலிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய சந்தையானது பெரும் சரிவினைக் கண்டு வரும் நிலையில், ரியல் எஸ்டேட் பங்குகளும் சரிவில் காணப்படுகின்றன. இதற்கிடையில் இன்று பட்டியலிடப்பட்ட ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 20% கீழாக சரிவில் காணப்படுகின்றது.
கொரோனாவால் பாதிப்பு
தற்போது நிறுவனம் நல்லதொரு வளர்ச்சி பாதையில் இருந்து வரும் நிலையில், முந்தைய காலாண்டுகளில் லாபத்திலேயே இருந்து வருகின்றது. தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாகவே கொரோனாவின் தாக்கம் நாட்டில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தி வரும் நிலையில், இது நிறுவனத்தின் செயல்பாட்டிலும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
எதிர்பார்ப்பு என்ன?
கொரோனா ரியல் எஸ்டேட் துறையிலும் கடந்த ஆண்டுகளாக தாக்கத்தினை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. ஆக இதன் தாக்கம் சந்தையில் இருக்கலாம் என்றாலும், இது தொடர்ந்து மீண்டும் நீண்டகால நோக்கில் வளர்ச்சியினை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தற்போது இந்த பங்கின் விலையானது குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் அதிகரிக்கலாம் என்றே நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தற்போதைய நிலவரம் என்ன?
ஸ்ரீராம் பிராபர்டீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது தொடக்கத்தில் 20% கீழாக தொடங்கிய நிலையில், தற்போது என் எஸ் இ-யில் 14.03% குறைந்து, 101.45 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 106.40 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 90 ரூபாயாகும்.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications