வெள்ளியின் விலையில் 400 ரூபாய் உயர்வு..!
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளியின் விலை 400 ரூபாய் வரை உயர்வு.
இன்று பங்குச்சந்தையில் முதலீட்டு அளவுகள் கணிசமாக உயர்ந்த நிலையில் நாணய சந்தையிலும் முதலீடுகள் அதிகரித்துக்காணப்பட்டது. இதனால் தொடர் சரிவில் இருந்த தங்கத்தின் விலை இன்று ஒரு நாளில் மட்டும் சவரனுக்கு 120 வரை உயர்ந்தது.
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று உயர்வுடன் காணப்பட்டது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் இந்திய நாணய சந்தையில் 1 கிராம் வெள்ளியின் விலை 40 பைசா வரை உயர்ந்தது. இதனால் 1 கிலோ பார் வெள்ளியின் விலை 41,025 ரூபாயில் இருந்து 41,425 ரூபாயாக உயர்ந்து காணப்பட்டது.



Click it and Unblock the Notifications