பங்கு சந்தையில் ஏற்றம் இறக்கம் என்பது சகஜமான ஒன்றாக இருந்தாலும், இது கொரோனா காலத்தில் ஏற்கனவே பெரிய இழப்பினை சந்தித்துள்ள நிறுவனங்கள் மேலும் இழப்பினை சந்தித்துள்ளன.
கடந்த வாரத்தில் அதிக சந்தை மதிப்புள்ள 10 நிறுவனங்களில், 6 நிறுவனங்கள் 92,147.28 கோடி ரூபாயினை இழந்துள்ளன.
இதில் ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் மற்றும் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பல பெரும் நஷ்டம் கண்ட நிறுவனங்களில் அடங்கும்.
Array
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட், ஐசிஐசிஐ வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் டாப் லூசர்களாகவும் உள்ளன. இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, பஜாஜ் பைனான்ஸ், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட வங்கிகள் டாப் கெயினர்களாக உள்ளன.
Array
ஐடி துறையில் முன்னணி நிறுவனமான டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 43,574.83 கோடி ரூபாய் குறைந்து, 11,86,563.20 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் 35,500.88 கோடி ரூபாயினை இழந்து, 13,14,293.35 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
Array
இதுவே ஹிந்துஸ்தான் யூனிலீவர் லிமிடெட் நிறுவனத்தின் சந்தை மதிப்பானது 9,139.9 கோடி ரூபாய் குறைந்து, 5,75,555.28 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே மற்றொரு ஜாம்பவான் ஆன இன்ஃபோசிஸ் நிறுவனம் 1,981.5 கோடி ரூபாய் சந்தை மதிப்பு குறைந்து, 6,65,930.24 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
Array
தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கியின் சந்தை மதிப்பானது 1,102.33 கோடி ரூபாய் குறைந்து, 4,42,302.42 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் சந்தை மதிப்பானது 847.84 கோடி ரூபாய் குறைந்து, 3,78,046.54 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதற்கு அடுத்தாற்போல், தனியார் துறையினை சேர்ந்த மிகப்பெரிய வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி அதன் சந்தை மதிப்பில் 28,574.61 கோடி ரூபாயினை இழந்து, 6,51,518.11 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
சந்தை மதிப்பு அதிகரிப்பு
ஹெச்டிஎஃப்சி வங்கியின் சந்தை மதிப்பானது 11,689.01 கோடி ரூபாய் அதிகரித்து 8,30,002.67 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதுவே பஜாஜ் பைனான்ஸின் சந்தை மதிப்பாந்து 8,332.62 கோடி ரூபாய் அதிகரித்து, 3,70,380.58 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
வங்கிகள் சந்தை மதிப்பு அதிகரிப்பு
ஹெச்.டி.எஃப்.சியின் சந்தை மதிப்பானது 32,909.44 கோடி ரூபாய் அதிகரித்து, 4,50,850.54 கோடி ரூபாயாக அதிகரித்தும், இதே கோடக் மகேந்திரா வங்கியின் சந்தை மதிப்பானது, 763.21 கோடி ரூபாய் அதிகரித்து, 3,41,000.47 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே ஹெச்சிஎல் டெக்னாலஜியின் சந்தை மதிப்பானது 2,455.87 கோடி ரூபாய் குறைந்து, 2,28,816.24 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதுவே தொலைத் தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பில் 409.16 கோடி ரூபாயினை இழந்து, 2,36,552.97 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இதே காலகட்டத்தில் 30 பங்குகள் அடங்கிய பிஎஸ்இ குறியீடு 94.48 புள்ளிகள் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

தங்க சந்தையில் நடந்த தலைகீழ் மாற்றம்!! பொட்டி பொட்டியாக வெளியே வரும் தங்கம்!!

ஈரான் போரை மையமாக வைத்து புதிய தொழில்: கோடிகளை அள்ளும் டிரம்ப் மகன்கள்!! வெளிச்சத்துக்கு வந்த உண்மை!!



Click it and Unblock the Notifications