இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 600 புள்ளிகள் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இன்றைய காலை வர்த்தக சரிவுக்கு மிக முக்கியமான காரணம் பன்னாட்டு முதலீட்டாளர்கள் தொடர்ந்து செய்யும் பங்கு விற்பனை தான்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையோடு நிறைவடைந்த கடந்த வார பங்கு வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 0.46 சதவீதம் மட்டுமே அதிகரித்தது. அதேசமயம், கடந்த வாரத்தில் 6 பென்னி பங்குகள் முதலீட்டாளர்களுக்கு 15 முதல் 30 சதவீதம் வரை வருமானத்தை அள்ளிக்கொடுத்துள்ளன. அந்த பென்னி பங்குகள் இதோ:

பல்சர் இன்டர்நேஷனல்
பல்சர் இன்டர்நேஷனல் நிறுவனம் பைனான்ஸ் மற்றும் முதலீடு வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த வாரம் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களுக்கு 28 சதவீதம் ஆதாயத்தை கொடுத்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.18.71ல் முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 10 சதவீதம் குறைந்து ரூ.16.84ஆக இருந்தது.
குஜராத் டூல்ரூம்
பூமியிலிருந்து கனிமங்கள் மற்றும் வளங்கள் பிரித்தெடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம் குஜராத் டூல்ரூம். கடந்த வாரம் இந்நிறுவன பங்கின் விலை 16 சதவீதம் உயர்ந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.12.50ல் முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே குஜராத் டூல்ரூம் பங்கின் விலை 5.68 சதவீதம் குறைந்து ரூ.11.79ஆக இருந்தது.
ஸ்ரீ கணேஷ் பயோடெக் (இந்தியா) லிமிடெட்
உயர்ரக கலப்பின விதைகள் உற்பத்தி, பதப்படுத்துதல் மற்றும் சந்தைப்படுத்துதல் வணிகத்தில் ஸ்ரீ கணேஷ் பயோடெக் (இந்தியா) லிமிடெட் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவன பங்கு கடந்த வாரம் முதலீட்டாளர்களுக்கு 18 சதவீதம் ஆதாயம் கொடுத்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.1.12ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 0.89 சதவீதம் குறைந்து ரூ.1.11ஆக இருந்தது.
சூப்பர்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
பாலிஸ்டர் இழை நூல் உள்ளிட்ட வணிகத்தில் சூப்பர்டெக்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.கடந்த வாரம் இந்நிறுவன பங்கின் விலை 16 சதவீதம் உயர்ந்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்பங்கின் விலை ரூ.12.28ல் முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 20 சதவீதம் சரிந்து ரூ.9.83ஆக இருந்தது.
ஆர்கெஸ்ப்
ஆர்கெஸ்ப் நிறுவனம் ஐடி சேவைகளை வழங்கி வருகிறது. கடந்த வாரம் இந்நிறுவன பங்கு முதலீட்டாளர்களின் செல்வத்தை 18 சதவீதம் அதிகரித்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்பங்கின் விலை ரூ.3.59ல் முடிவுற்றது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 2.79 சதவீதம் குறைந்து ரூ.3.49ஆக இருந்தது.
வரிமன் குளோபல் எண்டர்பிரைசஸ்
ஐடி தீர்வுகள் வழங்கும் நிறுவனம் வரிமன் குளோபல் எண்டர்பிரைசஸ். கடந்த வெள்ளிக்கிழமையோடு நிறைவடைந்த வாரத்தில் இப்பங்கின் விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ரூ.12.70ல் முடிவுற்றது. இன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை 2.05 சதவீதம் உயர்ந்து ரூ.12.80ஆக இருந்தது.
More From GoodReturns

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications