நிதித் துறையைச் சேர்ந்த ஸ்மால்கேப் வகை நிறுவனமான மோனார்க் நெட்வொர்த் கேபிடல் நிறுவனத்தின் (Monarch Networth Capital Limited) இயக்குநர்கள் குழு, அதன் முதலீட்டாளர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதற்கு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, நிறுவனத்தின் 1 ஈக்விட்டி பங்கை வைத்திருப்பவர் மேலும் ஒரு பங்கை இலவசமாக பெறுவார்கள்.இந்த போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கான பதிவு தேதியை செப்டம்பர் 13-ம் தேதியாக நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு நிர்ணயித்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபுறம், இந்த நிறுவனத்தின் பங்கு அதன் பங்குதாரர்களுக்கு கடந்த ஓராண்டில் 157 சதவீத லாபத்தை அளித்ததன் மூலம் மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது.
போனஸ் பங்குகள்: நிறுவனத்தின் பரிவர்த்தனை தாக்கல் படி, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அதன் சமீபத்திய கூட்டத்தில் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு தேதியில் டிமேட் கணக்கில் 1 ஈக்விட்டி பங்கின் 10 முகமதிப்பை கொண்டிருக்கும். அந்த நேரத்தில் தகுதிவாய்ந்த முதலீட்டாளர்களுக்கு கூடுதலாக ரூ. 10 முகமதிப்பு கொண்ட மேலும் ஒரு போனஸ் ஈக்விட்டி பங்கை வெளியிடுவதற்கு நிறுவனத்தின் குழு ஒப்புதல் அளித்துள்ளது. பதிவு செய்யப்பட்ட தேதியின்படி அவர்களின் டீமேட் கணக்கில் உள்ள பங்குகள் இந்த போனஸ் பங்குகளை வரவு வைக்கும் என்று நிறுவனம் அதன் பரிமாற்றத் தாக்கலில் கூறியுள்ளது.

இலக்கு விலை: மறுபுறம், முன்னணி ஆராய்ச்சி ஆய்வாளர் ஏ.ஆர்.ராமச்சந்திரன் பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு, மோனார்க் நெட்வொர்த் கேபிடல் லிமிடெட் பங்குகளுக்கு வாங்க மதிப்பீடு மற்றும் இலக்கு விலையை கொடுத்துள்ளார். இதன் ஒரு பகுதியாக இந்த நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு ரூ. 945 இலக்கு விலையை தருகிறோம் என்று வி.எல்.ஏ அம்பாலா கூறியுள்ளது. மேலும் இந்தப் பங்கிற்கு ரூ. 880 ஸ்டாப் லாஸ் வழங்கப்படுகிறது. இந்நிறுவனப் பங்கை தற்போதைய விலையில் வாங்கினால் சுமார் 7 சதவீதம் லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஏ.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஸ்டாக் அவுட் லுக்: நேற்றைய வர்த்தக அமர்வில், மோனார்க் நெட்வொர்த் கேபிடல் இன் பங்கு விலை சுமார் 2.4 சதவீதம் சரிந்து ரூ. 885ல் முடிந்தது. 52 வாரங்களில் அதிகபட்சமாக ரூ. 919, அதே போல் 52 வார குறைந்தபட்ச விலை ரூ. 308.95. பங்கு விலை கடந்த வாரத்தில் சுமார் 4 சதவீதமும், கடந்த மாதத்தில் 27 சதவீதமும், கடந்த ஆறு மாதங்களில் 51 சதவீதமும், கடந்த ஆண்டில் 157 சதவீதமும், கடந்த ஐந்தாண்டுகளில் 412 சதவீதமும் லாபம் பெற்றுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 3444 கோடியாக உள்ளது.
Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications