இந்திய பங்குச்சந்தை உள்நாட்டு மற்றும் சர்வதேச சந்தை காரணங்களால் அதிகப்படியான தடுமாற்றத்தையும் சரிவை எதிர்கொண்டு இருக்கும் வேளையில், முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை எதில் முதலீடு செய்ய வேண்டும் என்பதில் அதிகப்படியான குழப்பத்தில் உள்ளனர்.
இந்த நிலையில் சரியான வழிக்காட்டுதல், சரியான ஐடியா எந்த அளவுக்கு முக்கியம் என்பது தற்போது சந்தையில் முதலீடு செய்திருக்கும் முதலீட்டாளர்களுக்கு மட்டுமே தெரியும். இந்த நிலையில் 12,363 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டை கொண்ட 6 முக்கிய பண்ட்களை நிர்வாகம் செய்யும் டாடா மியூச்சவல் பண்ட் நிறுவனத்தின் பண்ட் மேனேஜர் மீட்டா ஷெட்டி முக்கியமான தரவுகளை முதலீட்டாளர்களுக்கு கூறுகிறார்.

மீட்டா ஷெட்டி டாடா டிஜிட்டல் இந்தியா, டாடா போகஸ்டு ஈக்விட்டி, டாடா இந்தியா பார்மா & ஹெல்த்கேர், டாடா லார்ஜ் & மிட் கேப் என 6 பண்ட்களை நிர்வாகம் செய்து வருகிறார். மீட்டா ஷெட்டி கணிப்பில் 2023 ஆம் ஆண்டும் கடந்த ஆண்டை போலவே இருக்கும் எனவும் சந்தை அதிகப்படியான உயர்வுக்கும், சரிவுக்கும் செல்லும். இதோடு அதிகப்படியான தடுமாற்றத்தை கொண்டு இருக்கும் என மனிகன்டோர்ல்-க்கு கொடுத்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இப்போது 10 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டுமெனில் எந்த பிரிவில், எந்த மியூச்சுவல் பண்ட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளித்த மீட்டா ஷெட்டி, ஏற்கனவே கூறியது போலவே 2023 ஆம் ஆண்டும் 2022 போலவே அதிகப்படியான தடுமாற்றம் கொண்டு இருக்கும் என்பதால் இந்த தடுமாற்றம் நம்முடைய முதலீட்டை பாதிக்காத வண்ணம் முதலீடு செய்ய வேண்டும் என கூறிய அவர். முதலீட்டை 3 விதிமாக பிரித்து மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய வேண்டும் என கூறுகிறார்.

முதலில் நாங்கள் எங்களுடைய முதலீட்டாளர்களுக்கு முதலீடு செய்ய இப்போதைய காலக்கட்டத்தில் பரிந்துரை செய்வது பேலென்ஸ் அட்வான்டேஜ் பண்ட் இது கட்டாயம் சந்தை தடுமாற்றத்தின் பாதிப்பை குறைக்கை வழி வகுக்கும். 2வதாக ஒரே மார்கெட் கேப்-ல் முதலீடு செய்யாமல் கலந்து முதலீடு செய்ய வேண்டும். flexi-cap அல்லது multi-cap fund, focused fund மற்றும் large & mid-cap fund-களில் முதலீடு செய்வது மூலம் கூடுதல் லாபத்தையும், நிலையான லாபத்தையும் பெற அதிக வாய்ப்பு உள்ளது.
3வதாக துறைவாரியான முதலீடுகள், இப்பிரிவு முதலீட்டில் ஆபத்து அளவு சற்று அதிகமாக உள்ளது மறக்க வேண்டாம். தற்போது இன்பரா, வங்கியியல் துறையில் முதலீடு செய்யலாம். வித்தியாசமாக யோசிக்கும் முதலீட்டாளர் என்றால் பார்மா துறையில் கூட முதலீடு செய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோல் உங்களுடைய மொத்த முதலீட்டையும் பங்குச்சந்தையில் செய்ய கூடாது என்பதையும் தெளிவாக கூறும் மீட்டா ஷெட்டி மொத்த முதலீட்டு தொகையான 10 லட்சம் ரூபாயில் தற்போதை சந்தை சூழ்நிலைக்கு ஏற்ப பங்குச்சந்தையில் 66 சதவீதமும், கடன் சந்தையில் 31 சதவீதமும் முதலீடு செய்ய வேண்டும் என முதலீட்டாளர்களை அறிவுறுத்துகிறார்.

மேலும் துறைவாரியான பங்கு முதலீட்டுக்கு குறைந்த பட்ச முதலீட்டு காலம் 3 முதல் 5 வருடம் என்பதையும் கூறுகிறார். மேலும் ஈக்விட்டி சந்தையில் முதலீடு செய்யும் 66 சதவீத தொகையை மேலே குறிப்பிட்ட 3 பிரிவுகளில் தனித்தனியாக பிரித்து முதலீடு செய்வது உத்தமம்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?

அப்புறம் பாத்துக்கலாம்னு அசால்ட்டா இருக்காதீங்க! 5 வருஷம் லேட் பண்ணா ரூ3கோடி காலி.. SIP ரகசியம்?

LIC பங்குதாரர்களுக்கு ஜாக்பாட்!! ஒன்னு ரெண்டாக போகுது!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

கிணற்றில் போட்ட கல்லு போல இருக்கும் வெள்ளி: இப்போது முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

3 ஆண்டுகளில் 740% வளர்ச்சி அடைந்த மல்டிபேக்கர் பங்கு: இப்போது முதலீடு செய்யலாமா?

மீண்டும் இந்திய பங்குச்சந்தையை நோக்கி வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!! இனியாவது சந்தை ஏறுமா?

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications