மும்பை: இந்திய பங்குச்சந்தையில் பிரீமியர் எனர்ஜிஸ் (Premier Energies) , வாரி எனர்ஜிஸ் (Waaree Energies)ஆகிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் ஒரே நாளில் சுமார் 11% வரை சரிவை கண்டன. இதற்கு முக்கிய காரணம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்ட ஒரு சட்ட மசோதா.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வரி சம்பந்தப்பட்ட மசோதா ஒன்று தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு இருக்கிறது. இந்த மசோதாவின் ஒரு அம்சம் இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் பணியாற்றும் பல்வேறு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் சரிவடைவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது. இந்த மசோதாவில் இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த பைடன் தலைமையிலான நிர்வாகத்தின் பணவீக்க குறைப்பு சட்டத்தின் முக்கிய விதிகள் திரும்பப் பெறுவது என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது .

காற்று மாசுபாடு மற்றும் பசுமை இல்ல வாயு உமிழ்வுகளை குறைப்பதற்கான திட்டங்களுக்கு வழங்கப்பட்ட மானியங்களை நீக்குவது, தூய்மையான எரிசக்தி திட்டங்களுக்கு வழங்கி வந்த நிதி உதவிகளை நீக்குவது, மின்சார கனரக வாகனங்களை வாங்குவதற்காக வழங்கப்பட்டு வந்த ஊக்க தொகையை நிறுத்துவது உள்ளிட்டவை இந்த சட்ட மசோதாவின் முக்கிய அம்சங்களாக இருக்கின்றன. மேலும் தங்கள் வீடுகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி கட்டமைப்புகளை நிறுவுபவர்களுக்கு அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் இருந்து 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்ற பிரிவும் இந்த புதிய சட்டத்தின் மூலம் நீக்கப்பட்டு இருக்கிறது.
இது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறிப்பாக சூரிய ஒளி மின்சக்தி துறையில் இயங்கக்கூடிய நிறுவனங்களின் பங்கு மதிப்புகளை வெகுவாக குறைவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன . அமெரிக்காவை சேர்ந்த சோலார் மின் உற்பத்தி நிறுவனமான சன்ரன், நெக்ஸ்ட் எரா எனர்ஜி ஆகிய பங்குகள் அமெரிக்க பங்குச்சந்தையான நாஸ்டாக்கில் கடும் சரிவை சந்தித்தன.. இந்த நிறுவனங்கள் சூரிய ஒளி மின்சக்தி மற்றும் காற்றாலை மின்சக்தி துறையில் இயங்கக் கூடியவை இவற்றின் பங்கு மதிப்புகள் ஒரே நாளில் 7 லிருந்து 37 சதவீதம் வரை சரிவை கண்டன.
இதுதான் இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலித்திருக்கிறது . இந்தியாவிலிருந்து பிரீமியர் எனர்ஜிஸ், வாரி எனர்ஜிஸ் ஆகிய நிறுவனங்கள் அமெரிக்காவிற்கு தேவையான சூரிய ஒளி மின் சக்திக்கு பயன்படுத்தப்படும் கட்டமைப்புகளையும் சோலார் பேனல்கள் உள்ளிட்டவற்றையும் ஏற்றுமதி செய்கின்றன. இந்த சூழலில் அமெரிக்க அரசின் இந்த சட்டம் காரணமாக இந்திய நிறுவனங்களுக்கு இந்த பிரிவுகளில் எல்லாம் இனி ஆர்டர்கள் கிடைக்காது என்ற ஒரு கருத்து பரவலாக எழுந்தது.
இதுவே இந்த நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் குறைவதற்கு காரணம் என சொல்லப்படுகிறது. மே 23ஆம் தேதி பங்குச்சந்தையில் பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு சுமார் 6 சதவீதம் வரை சரிவை கண்டு 1017 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது, அதேபோல வாரி எனர்ஜிஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பும் 11 சதவீதம் சரிவை கண்டு 2006 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

வெளியான ரகசியம்.. ஈரான் மீதான போர்.. டிரம்ப் சொன்னது பொய்யா..? Pentagon-ல் நடந்தது என்ன..?

ஈரான் போர் நீடிப்பதால் மனம் மாறிய அமெரிக்கா!! திடீரென இந்தியாவுக்கு சலுகை!!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஈரான் போரால் இந்திய பொருளாதாரத்திற்கு கெட்ட செய்தி!! நாளைக்கு பெரிய சூறாவளியே இருக்கு!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான் தலைவர் கமேனி கொல்லப்பட்டது எப்படி? வெளிச்சத்துக்கு வந்த அமெரிக்க- இஸ்ரேல் கூட்டு சதி!!

ஈரான் அட்டாக்.. டிரம்ப்-க்கு எதிராக நிற்கும் அமெரிக்க அரசியல் தலைவர்கள்.. முதல்ல எங்களுக்கு பதில சொல்லுங்க..!!

ஈரான் தலைவர் அயத்துல்லா அலி கமேனி மரணம்..? இஸ்ரேல், டிரம்ப் பகிரங்க அறிவிப்பு..!

ஈரான் தாக்குதல்: மொத்தமாக முடங்கிய UAE.. பங்குச் சந்தைகள், IT நிறுவனங்கள், பள்ளிகள் மூடல்..!

இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்கும் ஈரான்.. ஏவுகணை தாக்குதல் தொடங்கியது.. இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலி..!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!



Click it and Unblock the Notifications