இந்திய பங்குச்சந்தையின் சரிவுக்கு மத்தியிலும் சில நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ச்சியில் தான் இருக்கின்றன. பிரபல தரகு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி சோலார் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் பங்குகள் மீதான ஆய்வை வெளியிட்டுள்ளது. இதனால் அதன் பங்குகள் உயர்வுடனே வர்த்தகத்தை தொடங்கின.
மார்கன் ஸ்டான்லி இந்நிறுவன பங்கிற்கு 'ஓவர்வெயிட்' மதிப்பீடுடன் ஒரு பங்குக்கு ரூ 16,151 இலக்கு விலையை நிர்ணயித்துள்ளது. இது கடந்த வர்த்தக நாள் இறுதி விலையிலிருந்து 21%க்கும் அதிகமான ஏற்றத்திற்கான வாய்ப்பை சுட்டிக்காட்டுகிறது.

மார்கன் ஸ்டான்லியின் கூற்றுப்படி, சோலார் இண்டஸ்ட்ரீஸ் பாதுகாப்பு, வெடிபொருள் பிரிவுகளில் உள்நாட்டு, சர்வதேச விரிவாக்கம் மூலம் வளர்ச்சியைத் தக்கவைக்கும் பன்முக உத்தியைக் கொண்டுள்ளது. நிதி ஆண்டு 2026-30 காலகட்டத்தில் லாபம் 23% கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தில் (CAGR) உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புப் பிரிவில் 36%, சர்வதேச வெடிபொருள் வணிகத்தில் 14% வருவாய் சிஏஜிஆர் இதற்கு உந்துதலாக இருக்கும்.
இதே காலகட்டத்தில், ஒட்டுமொத்த வருவாய் 20%, ஈபிஐடிடிஏ (EBITDA), சரிசெய்யப்பட்ட நிகர லாபம் (Adjusted PAT) ஆகியவை முறையே 20%, 22%, 23% சிஏஜிஆர்-ல் உயரும். தற்போதுள்ள மற்றும் புதிய ஆர்டர்கள் வாயிலாக, பாதுகாப்பு வணிகத்தின் பங்களிப்பு FY26-ன் 27% இலிருந்து FY30-க்குள் 44% ஆக உயர்ந்து, 36% சிஏஜிஆர் வளர்ச்சியைப் பதிவு செய்யும் என கூறுகிறது.
சோலார் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தைப் பின்தொடரும் 11 ஆய்வாளர்களில் 10 பேர் 'வாங்க' எனவும், ஒருவர் 'வைத்திருக்க' எனவும் பரிந்துரைத்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இப்பங்கு 0.46% சரிந்து ரூ13,308-ல் முடிவடைந்தாலும், 2026ஆம் ஆண்டு இதுவரை 9%க்கும் மேல் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று இதன் பங்கு மதிப்பு 13,231 ரூபாய் என இருந்தது. கடந்த 5 ஆண்டுகளில் இதன் மதிப்பு 914% வளர்ச்சி அடைந்து முதலீட்டாளர்களை லாபம் பெற்று தந்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications