அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் அனைத்து நாடுகளும் குறைந்தபட்சம் 10 சதவீதம் விதித்தார் மேலும், அமெரிக்காவுடன் மிகப்பெரிய வர்த்தக ஏற்றத்தாழ்வுகளை கொண்ட சுமார் 60 நாடு்கள் மீது கூடுதல் வரிகளை டிரம்ப் விதித்தார். டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் வர்த்தக போரை உருவாக்கும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கை அந்நாட்டுக்கே பெரிய ஆபத்தாக முடியும் என்று கூறப்படுகிறது. வரி அதிகரிப்பால் பொருட்களின் விலை அதிகரிக்கும் இதன் விளைவாக பணவீக்கம் அதிகரிக்கும், வட்டி விகிதம் அதிகரிக்கும் இதன் தொடர்ச்சியாக அந்நாட்டின் பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதேசமயம், டிரம்பின் வரி விதிப்பு நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. அதேபோல் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுப்போம் என்று சீனா சூளுரைத்துள்ளது. மேலும், வரி விதிப்பு அமலுக்கு வரும் ஏப்ரல் 9ம் தேதிக்கு முன்னதாக சலுகைகளை அமெரிக்காவிடம் எதிர்பார்ப்பதால் தென்கொரியா, மெக்சிகோ மற்றும் பல வர்த்தக கூட்டாளிகள் பதில் நடவடிக்கையை நிறுத்தி வைத்துள்ளதாக தகவல். இதனால் டிரம்பின் வரி விதிப்பு சர்வதேச அளவில் வர்த்தக போரை உருவாக்கும் என்ற அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் அமெரிக்க பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.

டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு ஒரு முழுமையான வர்த்தக போர் மற்றும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் காரணமாக நேற்று அமெரிக்க பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு ஒரே நாளில் மிகப்பெரிய ஒரு நாள் சதவீத சரிவை சந்தித்தது. நேற்று S&P 500 இன்டெக்ஸ் 4.84 சதவீதம் சரிந்தது. இதற்கு முன் 2020 ஜூனில் S&P 500 இன்டெக்ஸ் ஒரே நாளில் அதிகபட்சமாக சரிவை சந்தித்து இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று S&P 500 நிறுவனங்களின் ஒட்டு மொத்த பங்குகளின் சந்தை மதிப்பு ஒரே நாளில் அதிகபட்சமாக 2.4 லட்சம் கோடி டாலர் சரிவடைந்தது. இதற்கு முன் அதிகபட்சமாக 2020 மார்ச் 16ம் தேதியன்று ஒரே நாளில் பங்குகளின் சந்தை மதிப்பு சரிவு கண்டு இருந்தது.
2020 ஜூனுக்கு பிறகு நேற்றுதான் டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி மோசமான ஒரு நாள் சரிவை சந்தித்தது. அதேநேரத்தில் 2020 மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகளாவிய சந்தைகளை ஒரு மோசமான நிலைக்கு தள்ளியதிலிருந்து நாஸ்டாக் காம்போசிட் பங்குச் சந்தை எந்த நாளிலும் இல்லாத அளவுக்கு நேற்று மிகப்பெரிய சரிவை சந்தித்தது. அமெரிக்க பங்குச் சந்தையின் வீழ்ச்சியின் தாக்கம், இன்று இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலையில் சரிவுடன் தொடங்கியது, வர்ததகத்தின் இடையே 700 புள்ளிகளுக்கு மேல் குறைந்தது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications