அமெரிக்க பங்குச் சந்தையின் முக்கிய குறியீடான S&P 500 புதன்கிழமை (ஜனவரி 29, 2026) முதல் முறையாக 7,000 புள்ளிகளை தாண்டியது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் அதிகரித்த நம்பிக்கை மற்றும் அமெரிக்காவின் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளதால், இந்த நிறுவனங்கள் வலுவான லாபத்தை பதிவு செய்யும் என்ற எதிர்பார்ப்பே இன்றைய உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
S&P 500 கடந்த ஆண்டு ஏப்ரலில் பதிவு செய்த குறைந்த அளவிலிருந்து சுமார் 45 சதவீதம் மீண்டுள்ளது. அப்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக வரி அச்சுறுத்தல்கள் காரணமாக அமெரிக்க பங்குச்சந்தை சரிந்து உலகளாவிய சந்தைகளை பாதித்தன.

மேலும் S&P 500 குறியீடு 4,000லிருந்து 5,000 புள்ளிகளை தொட மூன்று ஆண்டுகள் ஆனது. ஆனால் 5,000லிருந்து 6,000 புள்ளிகளை அடைய நவம்பர் 2024இல் வெறும் ஒன்பது மாதங்களே ஆனாது. இப்போது 7,000ஐ தொட டிரம்ப்-ன் வரி முட்டுக்கடையாக இருந்தாலும் வேகமாக மீண்டு வந்துள்ளது.
அமெரிக்காவின் S&P 500 குறியீடு 7,000 புள்ளிகளை முதல் முறையாக தாண்டியது இந்திய பங்குச் சந்தைக்கு நேரடி மற்றும் மறைமுக பலன்களை அளிக்கிறது. இந்த உயர்வு உலகளாவிய முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும். அமெரிக்க சந்தை வலுவாக இருக்கும்போது, FII (வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள்) இந்தியா போன்ற வளரும் சந்தைகளுக்கு பணத்தை திருப்பி விடு வாய்ப்புகள் அதிகம்.
என்விடியா, மைக்ரோசாப்ட், ஆல்பாபெட் போன்ற டெக் நிறுவனங்கள் S&P 500இல் சுமார் 50 சதவீத எடையை கொண்டுள்ளன. இந்த நிறுவனங்கள் காலாண்டு முடிவுகள் வெளியிடுவதால் பங்கு விலை உயர்வு ஏற்பட்டு S&P 500 குறியீடு வேகமாக முன்னேற்றுகிறது.
இதேபோல் அமெரிக்க பெடரல் ரிசர்வ் இன்று தனது நாணய கொள்கை கூட்டத்தை முடித்து வட்டி விகிதங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ள காரணத்தால், முதலீட்டு சந்தை மிகவும் உற்சாகமாக உள்ளது.
ஒருப்பக்கம் ஜெரோம் பவல் டிரம்ப்-ன் மிரட்டலுக்கு அஞ்சாமல் வட்டியை குறைக்கமாட்டார் என்ற கருத்து நிலவினாலும், மறுபக்கம் வட்டி குறையும் என எதிர்பார்ப்பும் இருக்கத்தான் செய்கிறது. இதனால் காலாண்டு முடிவுகள், பெட் முடிவுகள் என முதலீட்டாளர்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் வெளிப்பாடே இன்று S&P 500 குறியீடு 7000 புள்ளிகள் தொட காரணமாக அமைந்தது.
கடந்த ஆண்டு பெட் மூன்று முறை வட்டி குறைத்தது. 2026இல் இரண்டு முறை 25 அடிப்படை புள்ளிகள் குறைப்பு வரும் என்று வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர். இன்று நடைபெறும் பெட் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என்றும் கருத்து நிலவுகிறது.
More From GoodReturns

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications