இந்திய பங்குச்சந்தையில் சில ஸ்மால் கேப் பங்குகள் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபம் தந்துள்ளன. அப்படி ஒரு பங்கு கடந்த 5 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு கற்பனை செய்ய முடியாத லாபத்தை வாரி வழங்கி ஆச்சரியப்படுத்தியுள்ளது.
மின்சார உபகரணங்கள் மற்றும் உள்கட்டமைப்பு துறை சார்ந்த தயாரிப்புகளில் ஈடுபட்டுள்ள ஸ்பெக்ட்ரம் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் பங்கு விலை கடந்த 5 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று இப்பங்கின் விலை வெறும் 50 ரூபாய் தான். ஆனால் இன்று 3,813 ரூபாய் என உயர்வு கண்டுள்ளது. இதன் மூலம், இந்த பங்கு சுமார் 7,526 சதவீதத்திற்கும் அதிகமான லாபத்தை வழங்கியுள்ளது.

சரியாக 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனத்தில் ஒருவர் 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு தோராயமாக 76.26 லட்சம் ரூபாயாக உயர்ந்துருக்கும். இந்நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 6,495 கோடியாகும். இது தனது 52 வார உச்ச விலையான 4,033 ரூபாயை விட சுமார் 5.4% தள்ளுபடியில் 3,813 ரூபாய் என்ற விலையில் வர்த்தகமாகி வருகிறது.
ஸ்பெக்ட்ரம் எலக்ட்ரிக்கல் இண்டஸ்ட்ரீஸ் வலுவான நிதியை கொண்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 27% வளர்ச்சி கண்டுள்ளது. நிறுவன நிகர லாப வளர்ச்சி ஆண்டுக்கு சராசரியாக 49% என அதிகரித்துள்ளது. நிறுவன வருவாய் கடந்த காலாண்டில் 156 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது ,லாபம் 23 கோடியாகவும் அதிகரித்துள்ளது.
லெக்ராண்ட், ஷ்னைடர் எலக்ட்ரிக் , பானாசோனிக், ஹேகர் ,மற்றும் ஏபிபி போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு தேவையான உதிரிப்பாகங்களை இந்நிறுவனம் சப்ளை செய்கிறது. ஏசி பெட்டிகள் , மாடுலர் எலக்ட்ரிக் போர்டு பேனல்கள், மினி MCB பேஸ்கள் மற்றும் கவர்கள் போன்ற துல்லியமான உதிரிப்பாகங்கள் மற்றும் சிக்கலான பொறியியல் பிளாஸ்டிக் பாகங்களை உற்பத்தி செய்து OEM நிறுவனங்களுக்கும் பிற வாடிக்கையாளர்களுக்கும் வழங்கி வருகிறது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

