பட்ஜேட் உள்நாட்டு விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் லிமிடெட் பங்கு விலையானது, 8% மேலாக ஏற்றத்தில் காணப்படுகின்றது.
இது அரசின் அவசர கடன் உத்தரவாத திட்டத்தின் மூலம் கூடுதலாக 1000 கோடி ரூபாய் நிதியினை பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கிடையில் தான் இந்த நிறுவன பங்கின் விலையானது நல்ல ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது.
தற்போது நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் இந்த நிதியானது, இந்த விமான நிறுவனத்திற்கு மிக பயனுள்ளதாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வளர்ச்சி சாதகமாக அமையலாம்
இது ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவிகரமாக அமையலாம்.
இதன் காரணமாக இந்த ஏர்லைன் பங்கின் விலையானது இன்று காலை நேரத்திலேயே 5% மேலாக ஏற்றத்தில் காணப்படுகிறது. முடிவில் 8% மேலாக முடிவடைந்துள்ளது.
இன்றைய பங்கு நிலவரம்?
என் எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 8.71% ஏற்றம் கண்டு, 41.80 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 42.50 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 40.15 ரூபாயாகும்.
இதே பி எஸ் இ-யில் இப்பங்கின் விலையானது 8.84% ஏற்றம் கண்டு, 41.85 ரூபாயாக முடிவடைந்துள்ளது. இதன் உச்ச விலை 42.35 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 40.30 ரூபாயாகும்.இதன் 52 வார உச்ச விலை 87.25 ரூபாயாகும். இதே 52 வார குறைந்தபட்ச விலை 34.60 ரூபாயாகும்.
நிறுவனத்திற்கு உதவி
அரசின் இந்த கூடுதல் தொகையானது நிலுவையில் உள்ள தொகைகளை செலுத்த பயன்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விமான துறையில் நிலவி வரும் பிரச்சனைக்கு மத்தியில் இது உதவிகரமாக அமையலாம்.
பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கலாம்
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அரசு வழிகாட்டுதல் படி, 50% பயணிகளுடனேயே செயல்பட்டு வருகின்றது. கொரோனா காலத்தினை விட உள்நாட்டு பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரையில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை எட்டியுள்ளது. தற்போது சற்று குறைந்திருந்தாலும், வரவிருக்கும் வாரங்களில் விழாக்கால பருவம் களைகட்டியுள்ள நிலையில், பயணிகள் எண்ணிக்கையானது குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications