3446% லாபம் வழங்கிய பங்கு.. 1 பங்குக்கு 1 பங்கு இலவசம்.. முதலீட்டாளர்களுக்கு டபுள் பெனிஃபிட் தான்.!!

விவசாயத் துறையைச் சேர்ந்த ஸ்மால் கேப் வகைப் பங்கான ஸ்ப்ரைட் அக்ரோ லிமிடெட் நிறுவனமானது அதன் முதலீட்டாளர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்ப்ரைட் அக்ரோ பங்குகள் (Spright Agro Limited) அதன் முதலீட்டாளர்களுக்கு பயனளிக்கும் விதமாக, சமீபத்தில், நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூடி, அதன் முதலீட்டாளர்களுக்கு 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்தது. அதன்படி நிறுவனத்தின் 1 ஈக்விட்டி பங்கை வைத்திருப்பவர் கூடுதல் 1 ஈக்விட்டி பங்கைப் போனஸாகப் பெறுவார்கள்.

இந்த போனஸ் பங்குகளை வெளியிடுவதற்கான பதிவு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இந்த நிறுவனத்தின் பங்கு அதன் முதலீட்டாளர்களுக்கு கடந்த ஓராண்டில் 335 சதவீத லாபத்தை அளித்ததன் மூலம் மல்டிபேக்கர் பங்காக மாறியுள்ளது. இந்த பங்கு ஒரு ரூ.15 க்கும் கீழே உள்ள ஒரு பென்னி பங்கு ஆகும்.

3446% லாபம் வழங்கிய பங்கு.. 1 பங்குக்கு 1 பங்கு இலவசம்.. முதலீட்டாளர்களுக்கு டபுள் பெனிஃபிட் தான்.!!

நிறுவனத்தின் பரிவர்த்தனை தாக்கல் படி, நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு அதன் சமீபத்திய கூட்டத்தில் 1:1 என்ற விகிதத்தில் போனஸ் பங்குகளை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. அதாவது பதிவு தேதியின்படி, டிமேட் கணக்கில் ரூ.1 முகமதிப்பு கொண்ட 1 ஈக்விட்டி பங்கை வைத்திருப்பவர்களுக்கு, கூடுதலாக நிறுவனத்தின் போர்டு முகமதிப்பு ரூ.1 இன் படி மேலும் ஒரு போனஸ் ஈக்விட்டி பங்கை வழங்குவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் இந்த போனஸ் பங்குகளை வழங்குவதற்கான தகுதியான முதலீட்டாளர்களை நிர்ணயிப்பதற்கான பதிவு தேதியை நிறுவனம் விரைவில் அறிவிக்கும் என்று நிறுவனம் தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது

கடந்த வர்த்தகத்தில், ஸ்ப்ரைட் அக்ரோ லிமிடெட் பங்கு விலை சுமார் 5 சதவீதம் குறைந்து ரூ. 12.41க்கு வர்த்தகம் ஆனது. இதன் 52 வாரங்களில் அதிகபட்ச விலை ரூ. 89.32 ஆகவும், 52 வாரங்களில் குறைவான விலை ரூ. 12.41 ஆகவும் உள்ளது. கடந்த வாரத்தில் பங்கு விலை சுமார் 1 சதவீதம் இழந்துள்ளது. கடந்த மாதத்தில் இந்த பங்கு சுமார் 54 சதவீதம் இழந்துள்ளது. அதே போல் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 53 சதவீதத்தை பங்கு இழந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டில் மட்டும் பங்கு 355 சதவீதம் உயர்ந்துள்ளது.
அதுவே,கடந்த ஐந்து ஆண்டுகளில் 3446 லாபம் அதன் முதலீட்டாளர்களுக்கு வழங்கியுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு சுமார் ரூ. 700 கோடி ஆகும்.

இந்த நிறுவனத்தில் சில முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்கள் வாங்கும் மதிப்பையும் இலக்கு விலையையும் கொடுத்துள்ளன. இதன் ஒரு பகுதியாக இந்த நிறுவனத்தின் ஒரு பங்கிற்கு ரூ. 19.85 இலக்கு விலை மற்றும் ரூ.11 ஸ்டாப் லாஸ் ஆக அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிறுவனப் பங்கை தற்போதைய விலையில் வாங்கினால் சுமார் 60 சதவீதம் வரை லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+