9 மாதங்களில் ரூ.1 கோடி லாபம் தந்த டெலிகாம் நிறுவன பங்கு.. இப்போ வாங்கினால் கூட லாபம் கிடைக்குமாம்..!!

நம் பங்கு சந்தை ஏற்ற இறக்கமாக இருந்தாலும் சில பங்குகள் மட்டும் எதிர்பாராத அளவிற்கு அபார வளர்ச்சியை பதிவு செய்து வருகின்றன. அந்த வகையில் ஒரு டெலிகாம் பங்கு, குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களின் பணத்தை பல மடங்காக்கி ஜாக்பாட் லாபத்தை தந்துள்ளது.

ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆப்டிகல் ஃபைபர், கேபிள்கள் உள்ளிட்ட டெலிகாம் துறைக்கான தயாரிப்புகளை வழங்கும் ஒரு நிறுவனம். இந்நிறுவனம் 100க்கும் அதிகமான நாடுகளில் தன்னுடைய தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறது. அதுமட்டுமில்லாமல் வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் உற்பத்தி ஆலைகளை நிறுவி செயல்படுத்தி வருகிறது.

9 மாதங்களில் ரூ.1 கோடி லாபம் தந்த டெலிகாம் நிறுவன பங்கு.. இப்போ வாங்கினால் கூட லாபம் கிடைக்குமாம்..!

ஜனவரி 1ஆம் தேதி அன்று ஒரு பங்கின் மதிப்பு 100 ரூபாய் என்ற அளவில் இருந்தது, அதுவே தற்போது 1000 ரூபாய் என்ற அளவை எட்டி இருக்கிறது. நடப்பாண்டின் தொடக்கத்திலிருந்து இந்த பங்கு சுமார் 860%க்கும் அதிகமான அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.அப்படி பார்த்தால் இந்தாண்டின் தொடக்கத்தில் இதில் 10.42 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்தால் வெறும் 9 மாத காலத்திற்குள் அது 1 கோடி ரூபாயாக மாறி இருக்கும்.

Also Read

இன்று மும்பை பங்குச்சந்தையில் அப்பர் சர்கியூட்டை எட்டிஒரு பங்கின் விலை 1002 ரூபாய் என ஆனது. அண்மையில் தான் இந்த நிறுவனம் 1.2 பில்லியன் டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தை பெற்றது. இதனை அடுத்து இதன் பங்கு மதிப்பு உயர்து கொண்டே வருகிறது. இதனால் தான் பங்கு சந்தையின் சரிவுகளுக்கு மத்தியிலும் இந்த பங்கு அசுர வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்நிலையில் அதீத வளர்ச்சிக்கு பிறகும், இந்த பங்கின் மீதான முதலீட்டாளர்களின் ஆர்வம் குறையவில்லை. முன்னணி தரகு நிறுவனமான நிர்மல் பாங் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டீஸ் இப்போது கூட இந்த பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்கிறது. இந்த பங்குக்கு வாங்கலாம் என கூறியுள்ளது. இந்த பங்கின் விலையானது தற்போதைய விலையிலிருந்து கூடுதலாக 40% வரை உயரக்கூடும் என வலுவான கணிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரு பங்கின் விலை 1,340 ரூபாய் வரை உயரும் என கணித்துள்ளது.

Recommended For You

49,000 கோடி ரூபாய் சந்தை மூலதனம் கொண்டுள்ள இந்த நிறுவனத்தில் 42% பங்குகளை பிரமோட்டர்கள் வைத்துள்ளனர். வெளிநாட்டு நிறுவனங்கள் 19% பங்குகளை வாங்கி வைத்துள்ளன. இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் 4,804 கோடி ரூபாய் வருமானம் பார்த்தது, இது முந்தைய ஆண்டை விட 19% அதிகம், அதே போல 56 கோடி ரூபாய் லாப்ம் பார்த்தது அது முந்தைய ஆண்டை விட 177% லாபம் ஆகும்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+