மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை எதிர்வரும் 2025-26ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். எதிர்வரும் பட்ஜெட்டில், ரயில்வே மூலதன செலவினங்களுக்காக ரூ.3 லட்சம் கோடி வரை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரயில் சேவையை விரிவுப்படுத்துதல், ரயில்வேயின் உள்கட்டமைப்புகளை பலப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காக முந்தைய நிதியாண்டைக் காட்டிலும் கூடுதலாக நிதி ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2024-25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரயில்வேக்கு ரூ.2.62 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.
மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு காரணமாக, அடுத்த 2 வர்த்தக தினங்களில், இர்கான் இன்டர்நேஷனல், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட், ஆஐடிஇஎஸ் லிமிடெட், டெக்ஸ்மோகோ ரயில் கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா போன்ற ரயில்வே துறை பங்குகள் மற்றும் எல் அண்ட் டி மற்றும் சீமென்ஸ் போன்ற ரயில்வே ஆர்டர் தொடர்பான நிறுவன பங்குகள் மீது முதலீட்டாளர்களின் கவனம் இருக்கும். அதேசமயம், வளர்ச்சி குறித்த கவலைகள் காரணமாக ஒரு டஜன் ரயில்வே பங்குகளின் விலை அதன் 52 உயர்விலிருந்து 19 முதல் 51 சதவீதம் குறைந்துள்ளன. தற்போது ரயில்வேக்கான மூலதன செலவினங்கள் அதிகரிப்பு என்ற செய்தி முதலீட்டாளர்கள் உணர்வை உயர்த்தும்.

ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஜூபிடர் வேகன்ஸ் லிமிடெட் பங்கு விலை தற்போது அதன் 52 வார உச்சவிலையை காட்டிலும் 51.44 சதவீதம் குறைவாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.356.70ஆக இருந்தது. ரயில் பெட்டி உள்ளிட்டவைகளை தயாரித்து வரும் திதாகர் ரயில் நிறுவன பங்கு விலை தற்போது அதன் 52 வார உச்சவிலையை காட்டிலும் 50.04 சதவீதம் குறைவாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.960.40ஆக இருந்தது.
டெக்ஸ்மோகோ ரயில் அண்ட் என்ஜினீயரிங் லிமிடெட் பங்கு விலை தற்போது அதன் 52 வார உச்சவிலையை காட்டிலும் 38 சதவீதம் குறைவாக உள்ளது. மும்பை பங்குச் சந்தையில் நேற்று வர்த்தகத்தின் முடிவில் இப்பங்கின் விலை ரூ.189.90ஆக இருந்தது. இர்கான் இன்டர்நேஷனல் லிமிடெட், ஓரியண்டல் ரயில் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட், ரயில்டெல் கார்ப்பரேஷன் ஆஷப் இந்தியா மற்றும் ரைட்ஸ் ஆகிய நிறுவன பங்குகளின் விலை தற்போது அவற்றின் 52 வார உச்சவிலையை காட்டிலும் 38-44 சதவீதம் வரை குறைவாக உள்ளது.
கண்டெய்னர் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா, பிஇஎம்எல் லிமிடெட், ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட். இந்தியன் ரயில்வே கேட்டரிங் அண்ட் டூரிசம் கார்ப்பரேஷன் லிமிடெட் மற்றும் கெர்னெக்ஸ் மைக்ரோசிஸ்டம்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை தற்போது அவற்றின் 52 வார உச்சவிலையை காட்டிலும் 19-38 சதவீதம் வரை சரிந்துள்ளது. வளர்ச்சி வாய்ப்புகளுக்காக நவீனமயமாக்கல், நிலைத்தன்மை மற்றும் சரக்கு தளவாடங்களில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
story written by: Subramanian
More From GoodReturns

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications