2024-ல் காலியான பங்குகள்.. கண்ணீர் சிந்திய முதலீட்டாளர்கள்.. 2025-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

பங்குச் சந்தையில் எண்ணற்ற பங்குகள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் முதலீட்டாளர்களுக்கு ஏதோ ஒரு வகையில், தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும். சில பங்குகள் சிறந்த ஏற்றத்தில் இருந்தாலும், சில பங்குகள் பலத்த சரிவையும் அளித்து வருகின்றன. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டில், ஜூனியர் நிஃப்டி50 மற்றும் ஸ்மால் கேப்கள் வலுவான வருமானத்தை அளித்த நிலையில், ஏசியன் பெயிண்ட்ஸ், ரிலையன்ஸ், ஹெச்யுஎல், டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ், அதானி கிரீன் மற்றும் டிமார்ட் உள்ளிட்ட பல முக்கிய பங்குகள் சந்தை மதிப்பில் தலா 1 பில்லியன் டாலருக்கு மேல் இழந்தன.

ஜூனியர் நிஃப்டி 50 ஆனது 2024 இல் நிஃப்டி 50 வழங்கிய வருவாயை விட 3 மடங்கு மற்றும் ஸ்மால் கேப்கள் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்த நிலையில், பங்குச் சந்தையில் சில முக்கிய நிறுவனங்கள் பங்குச் சந்தையின் வணிக சுழற்சிகளின் தவறான பக்கத்தில் சிக்கி பில்லியன் கணக்கான டாலர்களை இழந்தன. அதில், ஏசியன் பெயிண்ட்ஸ் , ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஹெச்யுஎல் , டைட்டன், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவை உள்ளன.

2024-ல் காலியான பங்குகள்.. கண்ணீர் சிந்திய முதலீட்டாளர்கள்.. 2025-ல் பங்குச் சந்தை எப்படி இருக்கும்?

அதானி கிரீன் எனர்ஜி மற்றும் டிமார்ட் போன்ற பெரிய நிறுவனங்களால் வழிநடத்தப்படும் 27 பிஎஸ்இ500 பங்குகள், இந்த ஆண்டில் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் அதாவது ரூ. 8,500 கோடிக்கு மேல் சந்தை மதிப்பை இழந்துள்ளன.

காலண்டர் ஆண்டில் இதுவரை சுமார் 33% குறைந்து. ஏசியன் பெயிண்ட்ஸ் PE-மதிப்பீட்டால் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக அதன் சந்தை மூலதனம் ரூ. 1.07 லட்சம் கோடி குறைந்துள்ளது. இது 2024 ஆம் ஆண்டில் பங்குச் சந்தையில் ஏற்பட்ட அதிகபட்ச இழப்பாகும்.

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்-க்கு, 2024 மறக்க முடியாத ஆண்டாக மாறியது. இந்த ப்ளூசிப் பங்குகள் கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக சரிவாக இந்த ஆண்டை முடிக்க உள்ளது. அதன்படி, இதன் சந்தை மதிப்பு ரூ. 93,000 கோடிக்கு மேல் குறைந்து சுமார் ரூ. 16.5 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது.

அதேபோல், அதானி கிரீன் எனர்ஜி ரூ. 89,648 கோடியை இழந்துள்ளது. ஹெச்யுஎல் ரூ. 76,843 கோடி, இண்டஸ்இண்ட் வங்கி ரூ. 51,475 கோடி மற்றும் அதானி எண்டர்பிரைசஸ் ரூ. 50,951 கோடி ஆகியவை எம்-கேப் அடிப்படையில் அதிக நஷ்டம் அடைந்துள்ளன.

நெஸ்ட்லே இந்தியா, கோடக் மஹிந்திரா வங்கி, பர்கர் பெயிண்ட்ஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, எல்டிஐ மைண்ட்ரீ, ஜி எண்டர்டெயின்மெண்ட், பந்தன் வங்கி, டாடா எலக்ஸி, டாடா கன்சுயூமர் மற்றும் டாடா டெக்னாலஜிஸ் ஆகியவை சந்தை மதிப்பில் ஒரு பில்லியன் டாலர் சரிவைக் கண்ட மற்ற பங்குகளாகும் .

டிமார்ட் ஆனது, ஆன்லைன் மளிகை தளங்களான பிளிங்கிட், ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட், ஜெப்டோ மற்றும் பிக்பாஸ்கட் போன்றவற்றிலிருந்து கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது.

பஜாஜ் ஃபைனான்ஸைப் பொறுத்தவரை, வளர்ச்சி வலுவாக இருக்கும் அதே வேளையில், ஒட்டுமொத்த அடிப்படையிலான சொத்துத் தர அழுத்தம் மற்றும் உயர்ந்த கடன் செலவுகள் செயல்திறனைப் பாதிக்கிறது. மறுபுறம், கோடக் மஹிந்திரா வங்கி அதன் பாதுகாப்பற்ற கடன்கள், அதிக சறுக்கல்கள் மற்றும் மார்ஜின் சுருக்கங்கள் ஆகியவற்றில் அழுத்தத்தைக் கையாளுகிறது. இது இன்னும் சில காலாண்டுகளுக்கு நீடிக்கும் என்று கூறப்படுகிறது.

2024 இல் எந்த பிஎஸ்இ500 பங்குகள் மிகவும் வீழ்ச்சியடைந்தன?: இந்த ஆண்டில் இதுவரை 54% மதிப்பை இழந்துள்ளதால், ஜீ என்டர்டெயின்மென்ட் இந்த ஆண்டின் மிக மோசமாகச் செயல்படும் பிஎஸ்இ500 பங்குகளாகும். அதைத் தொடர்ந்து கிரெடிட் அக்சஸ் கிராமீன் (48% சரிவு) மற்றும் ஹொனாசா கன்சுயூமர் (42%) உள்ளன. ஆர்பிஎல் வங்கி, இண்டஸ்இண்ட் வங்கி மற்றும் உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கி ஆகியவை தலா 41% சரிந்துள்ளன. மொத்தத்தில், இவற்றில் 19 பங்குகள் வருடத்தில் குறைந்தது 30% கடுமையான வீழ்ச்சியைக் கண்டுள்ளன.

பிஎஸ்இ500 பங்குகள் அதிக லாபம் கொடுத்த பங்குகள்?: BSE500 பட்டியல் குறைந்தது 26 பங்குகளை உயர்த்தியுள்ளது, இது கேஃபின் டெக் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. இது 206% வருமானம் மல்டிபேக்கர் வருமானத்தை அளித்தது.

மோதிலால் ஓஸ்வால் ஃபைனான்சியல் சர்வீசஸ், அனந்த் ராஜ், கெய்ன்ஸ் டெக், டிக்சன், பிபி ஃபின்டெக், ஆர்விஎன்எல், ஆம்பர் எண்டர்பிரைசஸ், ட்ரெண்ட், ஜொமாடோ மற்றும் கொச்சின் ஷிப்யார்ட் ஆகியவை அதிக லாபம் ஈட்டியுள்ளன.

2025 முதல் பங்குச் சந்தையில் என்ன நடக்கும்?: 17 தரகு நிறுவனங்கள் பரிந்துரையின்படி, 2025 பங்குச் சந்தை ஆனது, சென்செக்ஸ் முதல் முறையாக 90,000 புள்ளியை விட அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோடக் மஹிந்திரா மியூச்சுவல் ஃபண்டின் நிலேஷ் ஷா, கடந்த ஐந்து ஆண்டுகளை விட 2025-ம் ஆண்டு கணிசமாக குறைந்த வருமானம் தரும் ஆண்டாக இருக்கும் என்று கணித்துள்ளார். லார்ஜ், மிட் மற்றும் ஸ்மால் கேப்களுக்கு இடையே வருமான வரம்பு குறைவாக இருக்கும் எனவும், ரிஸ்க்-ரிட்டர்ன் விகிதம் லார்ஜ் கேப்களுக்கு சாதகமாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+