மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை இன்று மூடப்பட்டிருக்கும். அதேசமயம், எம்சிஎக்ஸ்க்கு காலையில் மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி முதல் வழக்கம் போல் இரவு 11.30 மணி வரை எம்சிஎக்ஸில் வர்த்தகம் நடைபெறும்.
நாளை பங்குச் சந்தைகள் வழக்கம் போல் செயல்படும். நேற்று மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 379.93 புள்ளிகள் குறைந்து 73,847.15 புள்ளிகளாக சரிவடைந்தது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 136.70 புள்ளிகள் சரிந்து 22,399.15 புள்ளிகளில் நிலை கொண்டது.

நடப்பு ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 3 பங்குச் சந்தைகள் இயங்காது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து, டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு வரும் ஏப்ரல் 14ம் தேதி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18ம் தேதியன்று புனித வெள்ளியை முன்னிட்டு பங்குச் சந்தைகள் செயல்படாது.
2025ல் இந்திய பங்குச் சந்தைகளுக்கு மொத்தம் 14 தினங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மகாசிவராத்திரி (பிப்ரவரி 26), ஹோலி (மார்ச் 14) மற்றும் ரம்ஜான் (மார்ச் 31) ஆகியவற்றுக்காக விடுமுறை விடப்பட்டுள்ளது. மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு இன்று பங்குச் சந்தைகள் இயங்காது. எஞ்சியுள்ள விடுமுறை தினங்கள் இதோ:
ஏப்ரல் 14 டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் ஜெயந்தி
ஏப்ரல் 18 புனித வெள்ளி
மே 1 மகாராஷ்டிரா தினம்
ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் (79வது சுதந்திர தினம்)
ஆகஸ்ட் 27 ஸ்ரீ கணேஷ் சதுர்த்தி
அக்டோபர் 2 மகாத்மா காந்தி ஜெயந்தி
அக்டோபர் 21 தீபாவளி
அக்டோபர் 22 தீபாவளி பாலிபிரததிபதா
நவம்பர் 5 பிரகாஷ் குர்புர்ப் ஸ்ரீ குருநானக் தேவ் ஜெயந்தி
டிசம்பர் 25 கிறிஸ்துமஸ்
கடந்த 2024-25ம் நிதியாண்டு பங்குச் சந்தைகளுக்கு ஒரு பொன்னான ஆண்டாக அமைந்தது. கடந்த செப்டம்பர் இறுதியில் பங்குச் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. அப்போது மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 85,978.25 புள்ளிகளை எட்டியது, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிஃப்டி 26,277.35 புள்ளிகளை தொட்டது. ஆனால் அதன் பிறகு பங்குச் சந்தைகள் சரிவை சந்தித்தபோதிலும், ஒட்டு மொத்த அளவில் 2024-25ம் நிதியாண்டில் சென்செக்ஸ் 5.1 சதவீதமும், நிஃப்டி 5.3 சதவீதமும் வளர்ச்சி கண்டன.


Click it and Unblock the Notifications