பங்குச் சந்தை ஆனது இன்று அதிகபட்ச சரிவை பதிவு செய்துள்ளது. குறியீடுகள் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆனது இந்த புது வருடத்தில் அதிகபட்சமாக இழந்துள்ளது. இது முதலீட்டாளர்களுக்கு பேரிழப்பாக அமைந்தது. இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 1,400 புள்ளிகள் சரிந்தது. நிஃப்டி 1.8% சரிந்தது. வங்கி நிஃப்டி 1,200 புள்ளிகள் சரிந்தது. அதேபோல் விஐஎக்ஸ் 15% உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் சரிந்துள்ளது.
இன்றைய பங்குச் சந்தை ஆனது, இந்தியாவில் தற்போது வேகமாக பரவி வரும் HMPV வைரஸ், மூன்றாம் காலாண்டு வருவாய்கள் மற்றும் பலவீனமான உலகளாவிய மேக்ரோ பொருளாதாரக் கண்ணோட்டம் ஆகியவற்றால் அதிக விற்பனை அழுத்தத்தைக் கண்டது. அதேபோல், முக்கிய குறியீடுகள் கடுமையாக வீழ்ச்சியடைந்தன இதனால் சரிவை கண்டது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,442 புள்ளிகள் சரிந்து, 77,782 புள்ளிகள் என இன்ட்ராடே குறைந்தபட்சத்தை எட்டியது. இதற்கிடையில், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி நிஃப்டி 453 புள்ளிகள் சரிந்து 23,552 புள்ளிகளையும், மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் பங்குகள் மற்றும் லார்ஜ்கேப் பங்குகள் சந்தை சரிவினால் சரிவை சந்தித்தன. நிஃப்டி ஸ்மால்கேப் 100 ஆனது 646 புள்ளிகள் சரிந்து 18,389 ஆக குறைந்தது, அதே நேரத்தில் நிஃப்டி மிட்கேப் 100 குறியீடு 1,744 புள்ளிகள் சரிந்து 56,188 புள்ளிகளாக இருந்தது.
துறைசார்ந்த குறியீடுகளின்படி, நிஃப்டி மெட்டல் குறியீடு முன்னணியில் இருந்தது. இது 3.32 சதவீதம் சரிந்தது, அதைத் தொடர்ந்து நிஃப்டி ரியாலிட்டி குறியீடு 3.29 சதவீதம் சரிந்தது. ஹெவிவெயிட்களின் அழுத்தத்தின் கீழ் நிஃப்டி பேங்க் இன்டெக்ஸ் 1,200 புள்ளிகள் சரிந்தது. அதேபோல், நிஃப்டி PSU வங்கியில் இருந்து யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கிட்டத்தட்ட 8 சதவிகிதம் சரிந்து முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து பாங்க் ஆஃப் பரோடா 6% சரிவிலும், பஞ்சாப் & சிந்து வங்கி 5.18% சரிவிலும் உள்ளன.
எச்எம்பிவி வைரஸ் தொற்று இந்தியாவில் கண்டறியப்பட்டது. எனவே, தற்போது காய்ச்சல் சீசன் தொடங்குவதால், இந்த நோய் எந்த அளவிற்கு பரவியிருக்கும் என்ற அச்சம் முதலீட்டாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இதனை சரியாகக் கண்டறிவது கடினம் என மத்திய சுகாதார அமைச்சகம் உறுதியளித்துள்ளது.
அதேபோல், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 85.8463 ஆக சரிந்துள்ளது. கடந்த வாரம், டாலருக்கான வலுவான தேவை தொடர்வதால், வெளிநாட்டு சீன யுவானின் சரிவு மற்றும் வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களால் வெளிநாட்டு நிதி வெளியேறுதல் போன்றவற்றால் ரூபாயின் மதிப்பு அழுத்தத்தில் இருந்தது. டாலருக்கான தேவை மற்றும் பங்குகளின் வெளியேற்றம் காரணமாக அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 85.8463 என்ற வரலாற்றில் மிகக் குறைந்த அளவாக இருந்தது. டாலருக்கு எதிராக 85.77 ஆகத் திறக்கப்பட்டது. இதன் ஆரம்ப வர்த்தகத்தில் நிலையானதாக இருந்தது. ஆனால், ரூபாயின் மதிப்பு கடைசி அமர்வில் 85.78 ஆக இருந்தது.
இதற்கிடையில், ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, ரிசர்வ் வங்கியின் தலையீட்டால் டிசம்பர் 27ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 4.112 பில்லியன் டாலர் குறைந்து 640.279 பில்லியன் டாலராக உள்ளது. அதன்படி, செப்டம்பர் முதல் அந்நியச் செலாவணி கையிருப்பு 65 பில்லியன் டாலராக குறைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications