இந்திய பங்குச் சந்தைகளுக்கு கடந்த ஆண்டு ஒரு பொற்காலமாக அமைந்தது. கடந்த செப்டம்பர் மாதம் சந்தைகள் புதிய உச்சத்தை தொட்டன. குறிப்பாக மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் புதிய உச்சமான 85,978 புள்ளிகளை தொட்டது. ஆனால் அதன் பிறகு பங்குச் சந்தைகள் சரிவு காண தொடங்கியது. தற்போது சென்செக்ஸ் தனது உச்சத்தை காட்டிலும் சுமார் 10,000 புள்ளிகள் குறைந்து காணப்படுகிறது. தற்போதைய பங்குச் சந்தை நிலவரம் ஏற்ற இறக்கமாக நிலையில்லாமல் உள்ளது.
இந்த சூழ்நிலையில், சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான ரிச் டாட் புவர் டாட் புத்தகத்தின் புகழ்பெற்ற எழுத்தாளர் ராபர்ட் கியோசாகி, அடுத்த மாதம் உலக வரலாற்றில் மிகப் பெரிய பங்குச் சந்தை வீழ்ச்சி நிகழும் என்ற தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். இது சர்வதேச பங்குச் சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு கலக்கத்தை உருவாக்கியுள்ளது.

ராபர்ட் கியோசாகி 2013ல் எழுதிய ரிச் டாட்ஸ் ப்ராபசி என்ற புத்தகத்தில், முந்தைய பொருளாதார வீழ்ச்சிகளை காட்டிலும் பெரிதாக இருக்கும் என்று வரவிருக்கும் ஒரு பங்குச் சந்தை வீழ்ச்சி பற்றி எச்சரிக்கை செய்து இருந்தார். ஆனால் இது குறித்து யாரும் பெரிதாக கணக்கில் கொள்ளவில்லை.
இந்நிலையில் சமீபத்தில் கியோசாகி போட்ட டிவிட் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கணிப்பு அல்லது தீர்க்கதரிசனம் நிறைவேறி வருவதாகவும், 2025 பிப்ரவரியில் இந்த வீழ்ச்சி ஏற்படும் என்று அந்த டிவிட் தெரிவிக்கிறது.
இந்த செய்தியால் கியோசாகி பீதியடைய செய்யவில்லை. மாறாக இந்த வீழ்ச்சி ஒரு சிறந்த வாங்கும் வாய்ப்பை வழங்கும் என்று அவர் நம்புகிறார். இந்த வீழ்ச்சியில் அனைத்தும் விற்பனைக்கு வரும். பங்குச் சந்தை சரிவின் போது கார்கள் மற்றும் வீடுகள் போன்ற சொத்துக்கள் மலிவு விலையில் கிடைக்கும்.
பங்கு மற்றும் பத்திரங்கள் சந்தையில் இருந்து மூலதனம் வெளியேறி, மாற்று முதலீட்டு வாய்ப்புகளில் குறிப்பாக பிட்காயினில் முதலீடு செய்யப்படுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான, அதிக லாபகரமான விருப்பங்களை தேடுவதால் கிரிப்போகரன்சி வளர்ச்சியை அனுபவிக்கும் என்று கியோசாகி கூறுகிறார்.
இவர் நீண்ட காலமாக பிட்காயின், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்வதை ஆதரவளிப்பவராக இருந்து வருகிறார். தன்னை பின்பிற்றுபவர்களிடம போலியிலிருந்து வெளியேறி கிரிப்டோவில் ஈடுபட வலியுறுத்துகிறார்.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramanian
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications