இந்திய பங்குச் சந்தையில் இன்று கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன. முக்கிய குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை நாள் தொடக்கத்தில் உச்சம் சென்று பின் சரிவை சந்தித்தன. சந்தையில் வாங்குவோரின் பலம் குறைந்து கரடிகளின் ஆதிக்கம் மேலோங்கியதால் ஒட்டுமொத்த பங்கு சந்தையும் அதலபாதாளத்திற்கு சென்றது.
சென்செக்ஸ் இன்றைய நாளின் உச்ச நிலையான 74,682 புள்ளிகளிலிருந்து சுமார் 1,400 புள்ளிகள் வரை சரிந்து 73,258 என்ற நிலைக்கு வீழ்ந்தது. நிஃப்டி குறியீடு தனது ஆரம்ப கட்ட லாபங்களை முற்றிலுமாக இழந்து, 450 புள்ளிகளுக்கும் அதிகமாகச் சரிந்து 22,700 என்ற முக்கியமான அளவுக்கு கீழ் சென்றது.

பங்கு சந்தை சரிவின் காரணமாக, மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் ஒட்டுமொத்த சந்தை மூலதன மதிப்பும் ஒரே நாளில 8 லட்சம் கோடிக்கும் அதிகமாக இழந்து மொத்த சந்தை மதிப்பு 460 லட்சம் கோடிக்கு ரூபாய்க்கு கீழே சென்றது. சோமாட்டோ மற்றும் பிளிங்கிட் நிறுவனங்களின் தாய் நிறுவனமான எட்டர்னல் 5% வரை சரிந்தது. பஜாஜ் பைனான்ஸ் பங்குகள் 4% வரை குறைந்தன.
மாருதி சுசூகி, டிரெண்ட் , என்டிபிசி , பிஇஎல் , இண்டிகோ, ஆக்சிஸ் வங்கி , டாடா ஸ்டீல் , அதானி போர்ட்ஸ் மற்றும் கோடக் மஹிந்திரா வங்கி போன்ற முன்னணி நிறுவனங்களின் பங்குகள் 3% வரை சரிவை கண்டன.
பங்கு சந்தையின் இந்த வீழ்ச்சிக்கு மத்தியில், தகவல் தொழில்நுட்பத் துறை பங்குகளான இன்ஃபோசிஸ் , டெக் மஹிந்திரா , டிசிஎஸ் மற்றும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் ஆகியவை 3% வரை உயர்ந்து சந்தைக்கு ஓரளவு கைகொடுத்தன. அல்ட்ராடெக் சிமெண்ட் பங்குகளும் 2% வரை லாபம் பெற்றன.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பணவீக்கம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அமெரிக்க பத்திரங்களின் ஈவுத்தொகை உயர்ந்தது உலகளாவிய முதலீட்டாளர்களை பங்கு சந்தையிலிருந்து வெளியேற செய்தது. இந்திய சந்தைகளிலிருந்து வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து முதலீடுகளை திரும்ப பெறுவது பங்குச்சந்தை தொடர் சரிவிலேயே இருக்க முக்கிய காரணமாகிவிட்டது.
இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரம் தான் சரிவில் இருந்து மீண்டன. ஆனால் இந்த வாரம் அவை அனைத்தையுமே இழந்துவிட்டன. ஒன்றரை ஆண்டுகளாக இந்திய பங்குச்சந்தைகள் ஏற்றம் காணாமலே இருப்பது முதலீட்டாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

