உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் திடீரென சரிந்தது ஏன்? - இங்க தான் டிவிஸ்ட்

ஜிஎஸ்டி வரி சீர்த்திருத்தம் காரணமாக ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் திடீரென சரிவை கண்டுள்ளன. காலை வர்த்தகத்தில், பிஎஸ்இ சென்செக்ஸ் 888.96 புள்ளிகள் அதிகரித்து 81,456.67 ஆகவும், என்எஸ்இ நிஃப்டி 265.7 புள்ளிகள் உயர்ந்து 24,980.75 ஆகவும் இருந்தது.

பங்குச்சந்தைகள் உயர்வு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பின்னர் சென்செக்ஸ் அதன் அதிகபட்ச உயர்விலிருந்து 500 புள்ளிகள் குறைந்தது, நிஃப்டி 24,850க்கு கீழ் சரிந்தது. பங்குச்சந்தையின் இந்த சரிவுக்கு பல காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன.

உயர்வுடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் திடீரென சரிந்தது ஏன்? - இங்க தான் டிவிஸ்ட்

லாபம் எடுத்த முதலீட்டாளர்கள்: ஜிஎஸ்டி கவுன்சிலின் வரி சீர்த்திருத்த அறிவிப்பு ஆட்டோ, எஃப்எம்சிஜி, நுகர்வோர் நீடித்த பொருட்கள் பங்குகளை எழுச்சி அடைய வைத்தது. சென்செக்ஸ் நிறுவனங்களில், மஹிந்திரா & மஹிந்திரா 7.5% மேல் உயர்ந்தது. பஜாஜ் ஃபைனான்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஃபின்சர்வ், ஐடிசி, டாடா மோட்டார்ஸ் மற்றும் அல்ட்ராடெக் சிமென்ட் ஆகியவற்றின் மதிப்பும் உயர்ந்தன. இருந்தாலும் முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி லாபத்தை பதிவு செய்து வெளியேறியதால் சந்தை வீழ்ச்சி அடைந்தது.

ஜியோஜித் இன்வெஸ்ட்மென்ட்ஸ் லிமிடெட்டின் தலைமை முதலீட்டு உத்தியாளர் வி.கே.விஜயகுமார், "அமெரிக்க வர்த்தக மோதல் சந்தையைத் தொடர்ந்து அச்சுறுத்தும்" என்று தெரிவித்தார். "ஏற்கனவே வளர்ச்சிப் பாதையில் இருக்கும் ஒரு பொருளாதாரத்தில் நுகர்வுக்கு சாத்தியமான பெரிய ஊக்கம் ஜிஎஸ்டி சீர்திருத்தம் மூலம் வந்துள்ளது, ஏற்கனவே வழங்கப்பட்ட நிதி மற்றும் பணவியல் ஊக்கத்துடன் சேர்ந்து, ஒரு நல்ல சுழற்சியைத் தூண்டி, இந்தியாவின் வளர்ச்சியை FY26 இல் 6.5% ஆகவும், FY27 இல் 7% ஆகவும் உயர்த்தும்" என கூறியுள்ளார்.

ஸ்வாஸ்டிகா இன்வெஸ்ட்மார்ட்டின் ஆராய்ச்சித் தலைவர் சந்தோஷ் மீனா, "இந்திய பங்குச் சந்தை, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களை ஏற்க தயாராக உள்ளது. இந்த குறைப்பு, பண்டிகை காலத்திற்கு முன்னதாக நுகர்வோர் தேவையைத் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று கூறினார். மேலும், இது நுகர்வோர் நீடித்த பொருட்கள், ஆட்டோமொபைல் மற்றும் எஃப்எம்சிஜி போன்ற துறைகளுக்கு பயனளிக்கும். இருப்பினும், இந்தத் துறைகளில் உள்ள பங்குகள் அந்த எதிர்பார்ப்பில் தான் உயர்ந்தன என்று தெரிவித்தார்.

உலக பொருளாதாரம்: பலவீனமான அமெரிக்க வேலைவாய்ப்புத் தரவுகளுக்குப் பிறகு, ஃபெடரல் ரிசர்வ் கொள்கை தளர்வு பற்றிய ஆரம்பகால நம்பிக்கை மங்கியதால், சீனப் பங்குகளில் விற்பனை அதிகரித்ததால் ஆசியப் பங்குகளின் முன்னேற்றம் குறைந்தது. இதுவும் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். உள்நாட்டில் வளர்ச்சிக்கான வாய்ப்பு இருந்தாலும் புற காரணிகள் பங்குச்சந்தையை அழுத்தத்தில் வைத்துள்ளன.

வெளியேறும் முதலீட்டாளர்கள்: பரிமாற்றத் தரவுகளின்படி, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) புதன்கிழமை ரூ.1,666.46 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றனர், அதேசமயம் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (டிஐஐ) ரூ.2,495.33 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கினர். இப்படி வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து இந்திய பங்குச்சந்தையில் இருந்து வெளியேறுவது பங்குச்சந்தை வீழ்ச்சியை அதிகரிக்க செய்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+