சென்னை: ஃபுட் டெக் யூனிகார்ன் ஸ்விக்கி அதன் பங்குதாரர்களிமிருந்து 1.2 பில்லியன் டாலருக்கான ஐபிஓ-வை வெளியிட ஒப்புதல் பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஒப்புதல் பங்குதாரர்களின் அவசர கால பொது கூட்டத்தில் வழங்கப்பட்டதாக கூறியது.
இந்த 1.2 பில்லியன் டாலர் அதாவது 10,414 கோடி ரூபாய் ஐபிஓ திட்டத்தில், 3750 கோடி ரூபாய் பங்குகளை பிரஷ் இஷ்யூவாகவும், 6664 கோடி ரூபாயை ஆஃபர் பார் சேல் பிரிவில் திரட்டவும் ஸ்விக்கி முடிவு செய்துள்ளது என TheKredible வெளியிட்டப்பட்ட தரவுகள் கூறுகிறது,

செபியிடம் ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை ஸ்விக்கி இன்னும் சமர்ப்பிக்கவில்லை. இதனிடையே சில முதலீட்டாளர்களின் ஆவணங்களை வைத்து ரூ.750 கோடிக்கு ப்ரீ-ஐபிஓ மூலம் முதலீட்டை ஈர்க்க ஸ்விக்கி முடிவு செய்துள்ளது.
அண்மையில் என்டிராக்கர், ஸ்விக்கி தனது ஒரு பங்கை ரூ.350 மதிப்பில் ரூ.80,000 கோடிக்கு மதிப்பீட்டில் இந்த ஐபிஓ-வில் பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தது. இது ஸ்விக்கியின் சமீபத்திய முதலீட்டு சுற்று மதிப்பீட்டில் 20 சதவீத தள்ளுபடியாகும்.
ஸ்விக்கியின் கடந்த நிதி திரட்டல் 2022 ஜனவரியில் நடைபெற்றது, இது 700 மில்லியன் டாலர் மதிப்புடைய முதலீட்டு சுற்றாகும். இந்ச முதலீட்டு சுற்றில் 10.7 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் இன்வெஸ்கோ தலைமையில் நடந்தது.
கடந்த மாதம் ஸ்விக்கியின் முதலீட்டாளர் பேரன் கேபிடல் அதன் ஸ்விக்கி பங்கை 74.7 மில்லியன் டாலரில் இருந்து 87.2 மில்லியன் டாலராக உயர்த்தியது. இதனால் ஸ்விக்கியின் மதிப்பீடு 12.1 பில்லியன் டாலர்களானது. இது அதன் கடந்த நிதி திரட்டலைவிட 13 சதவீதம் அதிகமாகும்.
இதனிடையே மற்றொரு முதலீட்டாளரான இன்வெஸ்கோ ஸ்விக்கியின் மதிப்பீட்டை 19 சதவீதம் அதிகரித்து 12.7 பில்லியன் டாலராக்கியது. இது அந்த அமெரிக்க நிறுவனத்தின் மூன்றாவது தொடர்ச்சியான மதிப்பு உயர்த்தலாகும்.
இன்வெஸ்கோ, பேரன் கேபிடல் ஆகிய இரு நிறுவனங்களும் ஸ்விக்கியின் 2022 நிதி திரட்டலின் பங்கு வகித்தன.
ஸ்விக்கியின் லேட்டஸ்ட் மதிப்பீடு 12.7 பில்லியன் டாலராக இருக்கும். இது அதன் போட்டி நிறுவனமான சோமாட்டாவின் மதிப்பான 20 பில்லியன்களைவிட குறைவாகும்.
ஸ்விக்கி முதலீட்டாளர்கள் மத்தியிலான கூட்டத்தில் பங்குதாரர்கள் ஸ்ரீஹர்ஷ மேஜெட்டியை ஒரு எக்ஸிகியூட்டிவ் டைரக்டராக, நிறுவனத்தின் சிஇஓ மற்றும் நிர்வாக இயக்குநர் பதவியில் அமர்த்தினர்.
ஸ்விக்கியின் இணை நிறுவனர் நந்தன் ரெட்டியை முழு நேர டைரக்டராகவும் இன்னோவேஷன் ஹெட்டாகவும் நியமனம் செய்தனர்.
பிப்ரவரியில், ஸ்விக்கி-யின் தாய் நிறுவனமான பண்டில் டெக்னாலஜிஸ் என்பதிலிருந்து ஸ்விக்கி என பதிவுசெய்யப்பட்ட பெயரை மாற்றியது. சமீபத்திய RoC தாக்கல்களின்படி, நிறுவனம் தன்னை ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாக மாற்றியுள்ளது.
2023 நிதியாண்டில், ஸ்விக்கியின் வருவாய் சுமார் 45% அதிகரித்து ரூ. 8,264.6 கோடியாக இருந்தது, அதே நேரத்தில் இழப்புகள் 15% அதிகரித்து ரூ.4,179 கோடியாக இருந்தது.
Story written by: I.Jayachandran
More From GoodReturns

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!



Click it and Unblock the Notifications