மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 4 நாள் தொடர் சரிவை மீட்டெடுத்து இன்று சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தது 376 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 84 புள்ளிகள் உயர்ந்தது. இவற்றில் ஹிந்துஸ்தான் யுனிலீவர் 3 சதவீதமும், பேடிஎம் பங்குகள் 5 சதவீதமும் உயர்ந்தன. கடந்த வார வேலைகள் தரவு தொடர்ந்து தொழிலாளர் சந்தை மந்தநிலையைக் காட்டிய பின்னர் அமெரிக்கப் பொருளாதாரத்தின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் தொடர்ந்து நீடித்ததால் இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி மந்தமான வர்த்தகத்தில் தொடங்கின. இருப்பினும் வர்த்தக முடிவு நேரத்தில் சிறிது லாபம் கண்டன. இந்த சமீபத்திய ஏற்றத்தை தொடர்ந்து உள்நாட்டு முதலீட்டாளர்கள் லாபத்தை பதிவு செய்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
13 முக்கிய துறைகளில் 9 துறைகள் நஷ்டத்தை சந்தித்துள்ளன. நுகர்வோர் பங்குகள் 0.5% அதிகரித்த நிலையில் ஃபைனான்ஸ் பங்குகளும் 0.2% அதிகரித்தது. சென்செக்ஸில் 30ல் 20 பங்குகள் லாபத்திலும் 10 பங்குகள் நஷ்டத்திலும் வர்த்தகத்தை முடித்தன. அதேபோல், 370 பங்குகள் அப்பர் சர்க்யூட்டிலும், 307 பங்குகள் லோயர் சர்க்யூட்டிலும் முடிந்தன. நிஃப்டியை பொறுத்தவரை நிஃப்டி ஆயில் மற்றும் கேஸ் 1.18% சரிவிலும் எஃப்எம்சிஜி 2.02% ஏற்றத்திலும் முடிந்தன. இதுதவிர நிஃப்டி ஐடி, மீடியா, மெட்டல் பார்மா, பொதுதுறை வங்கி துறைகள் சிறிய அளவில் சரிவை சந்தித்தன.

இன்றைய வர்த்தகம் முடியும் நேரத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 375.61 புள்ளிகளை இழந்து 81,559.54 புள்ளிகளாகவும், நிஃப்டி 84.25 புள்ளிகளை இழந்து 24,936.40 புள்ளிகளாகவும் முடிந்தன. இதில் டாப் லாபத்தை சந்தித்த பங்குகளில் அலெம்பிக் பார்மா 8.71% உயர்விலும், ஜூபிலியண்ட் லைஃப் 8.24% உயர்விலும் இருந்தன. அதேபோல், பிஎன்பி ஹவுசிங் மற்றும் ஜிஐசி பங்குகளும் அதிகம் லாபம் பெற்றன. மறுபுறம் அதிக நஷ்டமடைந்த பங்குகளில் கமர்சியல் இன்ஞினியரிங் 7.07% சரிவுடனும், இன்ஞினியர்ஸ் இந்தியா 5.79% சரிவுடனும் முடிந்தன. இவற்றுடன் ஹோம் ஃபர்ஸ்ட் ஃபைனான்ஸ், காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்குகளும் சரிந்தன.


Click it and Unblock the Notifications