இந்த வார தொடக்கத்தில் இருந்தே, சென்செக்ஸ் நிதானமாக ஏற்றம் கண்டு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. இன்றும் சென்செக்ஸில் அந்த ஏற்றம் தொடர்ந்து கொண்டு இருக்கிறது.
நேற்று (19 அக்டோபர் 2020) மாலை, சென்செக்ஸ் 40,431 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 40,420 புள்ளிகளில் வர்த்தகமாகத் தொடங்கியது சென்செக்ஸ்.

வர்த்தக நேரத்தில் அதிகபட்சமாக 40,692 புள்ளிகளைத் தொட்டு வர்த்தகமானது. தற்போது நேற்றைய குளோசிங் விலையில் இருந்து 250 புள்ளிகள் ஏற்றம் கண்டு 40,681 புள்ளிகளுக்கு இன்றைய வர்த்தகம் நிறைவடைந்து இருக்கிறது.
BSE சந்தை நிலவரம் என்ன?
சென்செக்ஸின் 30 பங்குகளில் 20 பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. 10 பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன. பி எஸ் இ-யில் மொத்தம் 2,284 பங்குகள் வர்த்தகமாயின. அதில் 1,157 பங்குகள் ஏற்றத்திலும், 997 பங்குகள் விலை இறக்கத்திலும், 130 பங்குகள் விலை மாற்றமின்றியும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக, மும்பை பங்குச் சந்தையில், 77 பங்குகள் தங்களின் 52 வார விலை உச்சத்தைத் தொட்டு வர்த்தகமாயின.
பங்கு விலை நிலவரம்
சென்செக்ஸ் 30 இண்டெக்ஸில் பட்டியலிடப்பட்டு இருக்கும் 30 பங்குகளில் ஹெச் சி எல் டெக், எல் & டி, பார்தி ஏர்டெல், டெக் மஹிந்திரா, ஹெச் டி எஃப் சி பேங்க் போன்ற பங்குகள் விலை ஏற்றத்தில் வர்த்தகமாகின்றன. ஓ என் ஜி சி, என் டி பி சி, டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபைனான்ஸ், இண்டஸ் இண்ட் பேங்க் போன்ற பங்குகள் விலை இறக்கத்தில் வர்த்தகமாகின்றன.
ஐரோப்பிய சந்தைகள்
நேற்று (19 அக்டோபர் 2020), லண்டனின் எஃப் டி எஸ் இ 0.59 % இறக்கத்தில் வர்த்தகமானது. பிரான்சின் சி ஏ சி பங்குச் சந்தை 0.13 % இறக்கத்திலும், ஜெர்மனியின் டி ஏ எக்ஸ் பங்குச் சந்தை 0.42 % இறக்கத்திலும் வர்த்தகமாயின. ஒட்டு மொத்தமாக ஐரோப்பிய பங்குச் சந்தைகள் இறக்கத்தில் வர்த்தகம் நிறைவடைந்து இருக்கின்றன.
ஆசிய சந்தைகள்
இன்று (20 அக்டோபர் 2020) ஆசிய சந்தைகளில், சிங்கப்பூரின் எஸ் ஜி எக்ஸ் நிஃப்டி, தென் கொரியாவின் கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் காம்போசைட் தவிர, மற்ற ஆசிய நாட்டுப் பங்குச் சந்தைகள் எல்லாம் இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications