இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1180 புள்ளிகளை இழந்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 392 புள்ளிகளை இழந்துள்ளது. இதற்கிடையில், முதலீட்டாளர்கள் ரூ.8 லட்சம் கோடிகளை இழந்துள்ளனர். குறிப்பாக, வங்கி, ஃபைனான்சியல்ஸ் மற்று ஐடி பங்குகளில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் களம். ஃபெட் ரிசர்வ் வட்டி குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகள் உள்ளிட்ட சில காரணங்களால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. ஃபெட் வட்டி குறைப்பின் எதிரொலியாக சர்வதேச கச்சா எண்ணெய் விலை உட்பட நடப்பாண்டின் செப்டம்பர் காலாண்டு முடிவுகள் உள்ளிட்ட காரணங்களால் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 11 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 1316 புள்ளிகள் சரிந்து 78,411 புள்ளிகளாகவும், நிஃப்டி 449 புள்ளிகள் சரிந்து 23,854 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றன. இதற்கிடையில், இன்றைய வர்த்தகத்தில் மொத்தமாக பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் சந்தை மதிப்பு சுமார் ரூ.6.8 லட்சம் கோடி இழந்து ரூ.442 கோடியாக உள்ளது. அனைத்து குறியீடுகளும் இன்று சரிந்துள்ளது.

துறைகளின் வாரியாக, நிஃப்டி வங்கி, ஆட்டோ, ஃபைனான்சியல் சர்வீசஸ், ஐடி, பார்மா, மெட்டல், ரியல்டி, கன்சுயூமர் புராடெக்ட்ஸ் மற்றும் ஆயில் & கேஸ் உள்ளிட்டவைகள் 0.5% முதல் 1.7% வரை சரிந்துள்ளது. இதற்கிடயில், சந்தையின் போக்கை தீர்மானிக்கும் இந்தியாவின் VIX குறியீடு சுமார் 5.2% சரிந்து சுமார் 16.73 புள்ளிகளாக உள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் குறித்த அச்சம்: வரும் நவம்பர் 5 ஆம் தேதி நாளை அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் மற்றும் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள கடும் போட்டி காரணமாக முதலீட்டாளர்களிடையே அச்சம் நிலவி வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா ஹாரிஸ் வெற்றி பெறும் பட்சத்தில் அமெரிக்க ஃபெட் ரிசர்வ் வட்டி விகிதங்களில் மாற்றம் இந்தியாவில் உள்ள என்பிஎஃப்சிகளுக்கு சாதகமானதாக இருக்கும் என்றும், முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெற்றிபெறும் பட்சத்தில் அமெரிக்க ஃபெட் வட்டி விகித மாற்றங்கள் தாமதமாகலாம் என்று ஜியோஜித் ஃபைனான்சியல் தலைவர் வி.கே. விஜயகுமார் கூறியுள்ளார். இதனால் பொதுத்துறை வங்கிகளுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அடுத்த சில நாட்களில் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் நடைபெறும் மாற்றங்கள் மற்றும் அமெரிக்க ஃபெட் ரிசர்வ் வட்டி விகிதங்கள் ஆகியன பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என அவர் கூறியுள்ளார்.
ஃபெட் ரிசர்வ் கூட்டம்: நவம்பர் 7 அன்று நடைபெறவிருக்கும் அமெரிக்க ஃபெர் ரிசர்வ் கூட்டத்தில் வட்டி விகித குறைப்பு குறித்த எதிர்பார்ப்புகளும் இந்திய பங்குச் சந்தையில் நிலவிவருகிறது. இது கால் சதவீத புள்ளிகள் குறைப்பு உள்ளிட்டவைகள் வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்படலாம் எனவும், இதுகுறித்த கவலைகள் இன்றைய பங்குச் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
செப்டம்பர் காலாண்டு முடிவுகள் ஏமாற்றம்: இன்றைய பங்குச் சந்தை சரிவிற்கு நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செப்டம்பர் காலாண்டு முடிவுகளில் ஏமாற்றமளிக்கும் வருவாய் முக்கிய பங்காற்றுகின்றன. நிஃப்டி இபிஎஸ் வருவாய் வளர்ச்சி நடப்பாண்டிற்கான செப்டம்பர் காலாண்டு வருவாயில் 10% குறைத்துள்ளன. இது தற்போதைய மதிப்பீடுகளை விட 24 மடங்கு குறைப்பை பதிவு செய்துள்ளன. அதேபோல், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குகளை விற்பனை செய்து வருகின்றனர் என வி.கே. விஜயகுமார் கூறினார்.
எண்ணெய் விலை அதிகரிப்பு: அதேபோல், எண்ணெய் விலையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ப்ரெண்ட் ஃப்யூச்சர்ஸ் பேரலுக்கு சுமார் 1.18 டாலர்கள் அதிகரித்து 74.28 டாலர்கள் உயர்ந்துள்ளன. வெஸ்ட் டெக்சாஸ் இண்டர்மீடியேட் (WTI) கச்சா பேரலுக்கு சுமார் 1.20 டாலர்கள் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications