நடப்பு மாதத்தில் பங்கு சந்தையானது NSE, BSE இரண்டும் மீண்டும் மார்ச் 30 அன்று விடுமுறையாகும். இது ராம் நவமி காரணமாக விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக ஈக்விட்டி பிரிவு, ஈக்விட்டி டெரிவேட்டிவ் பிரிவு, எஸ் எல் பி பிரிவு மற்றும் கரன்சி டெரிவேட்டிவ் என அனைத்துக்கும் நாளை விடுமுறையாகும்.
கமாடிட்டி பிரிவிலும் (MCX) விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இதில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன? முதலீட்டாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
எம்சிஎக்ஸ் விடுமுறை
இந்திய எம்சிஎக்ஸ் சந்தையும் நாளை விடுமுறையாகும். எனினும் எம்சிஎக்ஸ் சந்தையினை பொறுத்த வரையில் காலை அமர்வு மட்டுமே விடுமுறை. மாலை 5 மணிக்கு தொடங்கி மாலை அமர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் காலை அமர்வு என்பது இல்லாததால், அதன் தாக்கம் என்பது மாலையில் இருக்கலாம் என்பதால் முதலீட்டாளர்கள் பாதுகாப்புடன் வர்த்தகம் செய்வது நல்லது.
ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம்
வழக்கம்போல வெள்ளிக்கிழமையன்று சந்தையானது எப்போதும் போல தொடங்கலாம். இது நடப்பு நிதியாண்டில் கடைசி விடுமுறை நாளாகும். வெளிக்கிழமையன்று இங்கிலாந்தின் ஜிடிபி தரவு மற்றும் அமெரிக்காவின் ஜிடிபி தரவு என பலவும் வெளியாகவுள்ளன. ஆக அவற்றின் தாக்கமும் சந்தையில் இருக்கலாம்.
ஏப்ரல் மாத விடுமுறை
ஏப்ரல் மாதத்திலும் பல விடுமுறை நாட்களானது உள்ளது. குறிப்பாக மகாவீர் ஜெயந்தி ஏப்ரல் 4 அன்றும், ஏப்ரல் 7 அன்று புனித வெள்ளி, ஏப்ரல் 14 அன்று பாபாசாகேப் அம்பேத்கர் ஜெயந்தி என தொடர்ந்து பல விடுமுறை நாட்கள் உள்ளது. ஆக இதுவும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றாக உள்ளது.
இன்றைய நிலவரம்
எது எப்படியோ இன்று இந்திய சந்தைகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளது. குறிப்பாக நிஃப்டி 130 புள்ளிகள் அதிகரித்து, 17080 என்ற லெவலிலும், இதே சென்செக்ஸ் 350 புள்ளிகள் அதிகரித்து, 57,960 என்ற லெவலிலும் முடிவடைந்துள்ளது. இன்றைய வர்த்தக அமர்வில் 13 முக்கிய குறியீடுகள் 12 குறியீடுகள் ஏற்றத்தில் முடிவடைந்துள்ளன. எனினும் வரவிருக்கும் நாட்களில் சந்தையில் ஏற்ற இறக்கம் என்பது அதிகரிக்கலாம். ஆக முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகம் செய்வது நல்லது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications