பங்குச்சந்தையில் மாபெரும் சரிவு.. வெளியான முக்கிய வார்னிங் சிக்னல்..?!

பங்குச்சந்தைய முதலீட்டாளர்கள் கடந்த 2-3 வருடங்களாக மிகப்பெரிய தடுமாற்றத்தை எதிர்கொண்டு இருக்கும் வேளையில் ஏஐ மூலம் உருவாகியிருக்கும் பபுள் எப்போது வெடிக்கும் என்ற அச்சம் அனைவரிடத்திலும் உள்ளது. இந்த நிலையில் அமெரிக்க பங்குச்சந்தையில் வெளியான சிக்னல் ஒரு சிகனல் பலரையும் கலங்கடித்துள்ளது.

S&P 500 CAPE விகிதம் பற்றி வெகு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கும் விஷயம், சர்வதேச பங்குச்சந்தையில் ஒவ்வொரு பெரிய சரிவும் இக்குறியீட்டு உச்சத்தை தொட்டப்போது நடந்தது. அந்த வகையில் S&P 500 CAPE ratio ஜூன் மாதத்தில் 40 என்ற அளவீட்டை தொட்ட நிலையில் தற்போது 41.96 என்ற அளவீட்டை தொட்டு உள்ளது.

பங்குச்சந்தையில் மாபெரும் சரிவு.. வெளியான முக்கிய வார்னிங் சிக்னல்..?!

இது கடந்த 155 வருடத்தில் 2வது முறையாக அதிகப்படியான அளவீட்டை தொட்டுள்ளது. இதற்கு முன்பு 1999ஆம் ஆண்டு டாட் காம் பபுள் வெடிக்கும் போது 40 என்ற அளவில் இருந்து உயர்ந்து 44.19 வரையில் உயர்ந்தது. தற்போது மீண்டும் 42-ஐ நெருங்கிய காரணத்தால் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் பீதியில் உள்ளது.

CAPE Ratio என்றால் என்ன?

இது பங்குச்சந்தை தற்போது அதிக விலையில் உள்ளதா அல்லது குறைந்த மதிப்பீட்டில் உள்ளதா என்பதை நீண்டகால அடிப்படையில் மதிப்பிட பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய அளவுகோல் ஆகும். இதே யேல் பல்கலைகழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான Robert Shiller இதை உருவாக்கினார். இதனாலேயே S&P 500 Shiller CAPE Ratio என அழைக்கப்படுவது வழக்கம்.

இந்த விகிதம் எப்படி கணக்கிடப்படுகிறது..

வழக்கமாக P/E Ratio என்பது கடந்த 4 காலாண்டு லாபத்தை மட்டும் வைத்து கணக்கிடப்படும், ஆனால் S&P 500 Shiller CAPE Ratio 10 ஆண்டுகளுக்கான பணவீக்கத்தால் சரிசெய்யப்பட்ட நிறுவன லாபத்தின் சராசரியை CAPE Ratio ஆக கணக்கிடப்படுகிறது. இந்த Shiller CAPE Ratio தரவுகள் சுமார் 150 ஆண்டுகளுக்கும் அதிகமாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது, 1871 ஆம் ஆண்டில் இருந்து கணக்கிடப்படுகிறது.

இதில் 40 என்ற அளவீட்டை கடப்பது மிகவும் அரிது என்பதாலேயே தற்போது முதலீட்டு சந்தையில் அச்சம் அதிகரித்துள்ளது.

இந்த Shiller CAPE Ratio 1999 டாட் காம் பபுளின் போது மட்டும் அல்லாமல் 1929ஆம் ஆண்டு பங்குச்சந்தை சரிவுக்கு முன்பும் CAPE Ratio 30-க்கு மேல் சென்றது குறிப்பிடத்தக்கது. இதன் பின்பு தான் Great Depression காலகட்டம் வந்தது.

முதலீட்டாளர்கள் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால் CAPE Ratio அதிகமமாக உயர்ந்த போது அதன் பின்பு ஏற்படும் சரிவு தான், Invesco வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி எப்போதெல்லாம் CAPE விகிதம் புதிய உச்சம் தொடுகிறதோ, அதன் பின்பு 10 வருடம் மந்தமான முதலீட்டு சந்தை சூழ்நிலை நிலவுகிறது.

இதனால் ஏஐ பபுள் வெடித்தால் பெரிய சரிவு ஏற்படலாம், இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் முதலீட்டாளர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளிக்கும் விஷயம் என்னவென்றால் தற்போது S&P 500 குறியீட்டில் இருக்கும் நிறுவனங்களின் லாபம் அதன் மதிப்பை காட்டிலும் வேகமாக உயர்ந்து வருகிறது என்பது தான். எனவே CAPE விகிதம் 42ஐ தொட்டதால் நிச்சயம் பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொள்ளும் என கூற முடியாது. லாபம் மற்றும் மதிப்பீட்டுக்கு மத்தியிலான வித்தியசம் வலுவாக இருக்கும் வரையில் பெரும் சரிவு என்பது வாய்ப்பில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+