சர்வதேச நிலவரங்கள், ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி போன்ற காரணங்களால் இந்த ஆண்டு தொடக்கம் முதலே இந்திய பங்குச் சந்தைகள் சரிவு கண்டு வருகின்றன. குறிப்பாக கடந்த 9 வர்ததக தினங்களில் மட்டும் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 3,000 புள்ளிகள் வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸே இந்த அடி வாங்கியது என்றால், அதிக ரிஸ்க் கொண்ட ஸ்மால்கேப் மற்றும் மைக்ரோகேப் பங்குகளின் நிலைமை எப்படி இருக்கும்?. உண்மையில் பங்குச் சந்தையில் ஸ்மால்கேப் மற்றும் மைக்ரோகேப் பங்குகள்தான் பலத்த அடி வாங்கின.
நிப்டியின் நிலவரமும் கவலைக்கிடமாகத்தான் உள்ளது. 2019 ஏப்ரல் 30 முதல் மே 13 வரையிலான 9 வர்த்தக தினங்களில் நிப்டி 5 சதவீதம் சரிந்தது. இருப்பினும் அடுத்த ஒரு வாரத்தில் நிப்டி 6 சதவீதம் ஏற்றம் கண்டது. ஆனால் தற்போது மோசமாக உள்ளது. 2019ம் ஆண்டை காட்டில் தற்போது நிப்டி பெரிய அடியை சந்தித்துள்ளது. நிப்டி இதனால் சில்லரை முதலீட்டாளர்கள் கடும் வேதனையில் உள்ளனர்.

பங்குச் சந்தை தற்போது கரடியின் கட்டுப்பாட்டில் உள்ளது. அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் தொடர்ந்து பங்குகளை இடைவிடாது விற்பனை செய்து வருவதால், பங்குச் சந்தையின் மோசமான நிலை இன்னும் முடியவில்லை என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோடக் இன்ஸ்டிடியூஷனல் ஈக்விட்டியின் சஞ்சீவ் பிரசாத் கூறுகையில், கடந்த சில மாதங்களில் பல துறைகள் மற்றும் பங்குகளில் கடுமையான சரிவு இருந்தபோதிலும், சந்தையின் பெரும்பாலான பகுதிகளில் அதிக மதிப்பை நாங்கள் காணவில்லை. பெரும்பாலான துறைகள் மற்றும் பங்குகள் இன்னும அதிக மதிப்பீடுகளில் வர்த்தகம் செய்யப்படுகிறது. வரும் நாட்களிலும் இந்திய சந்தை மந்தமாகவே இருக்கக்கூடும்.
அனைத்து துறைகள் மற்றும் பங்குகள் அதிக மதிப்பீட்டில் இருப்பது, நிறுவனங்களின் வருவாய் குறைப்பு மற்றும் நீண்ட காலத்துக்கு சர்வதேச அளவில் வட்டி விகிதங்கள் அதிகமாக இருப்பது ஆகியவற்றால் சந்தைகள் அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளன என்று தெரிவித்தார்.
எம்கேயின் சேஷாத்ரி சென் கூறுகையில், இந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டு (2025 ஜனவரி-மார்ச்) நிலையற்றதாகவே இருக்கும். பெரிய அளவில் விற்பனை அடிக்கடி நிகழலாம். அடுத்த காலாண்டு முதல் சந்தைகள் நிலைபெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
டிரம்ப் கட்டணங்கள் குறித்த கவலைகள் குறையும், 2025-26ம் நிதியாண்டுக்கான நிப்டியின் இபிஎஸ் வளர்ச்சி 12-13 சதவீதமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு மற்றும் விருப்பமான நுகர்வு தேவையில் மீட்சிக்கான அறிகுறிகள் தெரியத் தொடங்க வேண்டும் ஆகிய 3 காரணங்களால் அடுத்த காலாண்டு முதல் சந்தைகள் நிலைபெறும் என்று எதிர்பார்க்கிறோம் என தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications