பங்குச் சந்தையில் ஜொலித்த பங்குகள்.. அதிகம் வாங்கப்பட்ட 100 ரூபாய் குறைவான பங்குகள் இதுதான்..!!

இன்றைய பங்குச் சந்தையில் மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி ஆகிய இரண்டும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை முடித்தன. காலை ஆரம்ப வர்த்தகத்தில் சரிவுடன் தொடங்கிய நிலையில் வர்த்தகம் முடியும் நேரத்தில் ஏற்றம் கண்டன. அதன்படி, சென்செக்ஸ் 694 புள்ளிகள் உயர்வுடன் 79,476 புள்ளிகளாகவும், நிஃப்டி 217 புள்ளிகள் உயர்வுடன் 24,213 புள்ளிகளாகவும் முடிந்தன. இதில் 2468 பங்குகள் ஏற்றத்துடனும், 1748 பங்குகள் சரிவுடனும் இன்றைய வர்த்தகத்தை முடித்து கொண்டன. அதேபோல், 112 பங்குகளில் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தன.

செம்படம்பர் 27 நிலவரப்படி, பிஎஸ்இ சென்செக்ஸ் அதன் 52 வார அதிகபட்சமான 85978 புள்ளிகளையும், என்எஸ்இ நிஃப்டி அதன் 52 வார அதிகபட்சமான 26,277 புள்ளிகளையும் எட்டின.

 பங்குச் சந்தையில் ஜொலித்த பங்குகள்.. அதிகம் வாங்கப்பட்ட 100 ரூபாய் குறைவான பங்குகள் இதுதான்..!!

ஒட்டுமொத்த பங்குச் சந்தையும் எற்றத்துடன் இருந்தன. குறிப்பாக மிட்கேப் குறியீடு 0.41% அதிகரித்தது. அதேபோல், பிஎஸ்இ ஸ்மால்கேப் குறியீடு 0.48% ஏற்றத்துடன் இருந்தது. மிட்கேப் லாபம் ஈட்டிய பங்குகளில் கிளாண்ட் பார்மா, மஜாகன் டாக்‌ ஷிப் பில்டர்ஸ் மற்றும் ஆயில் இந்தியா ஆகியவை உள்ளன. அதேபோல், ஸ்மால்கேப் லாபம் ஈட்டிய பங்குகள் திலக் நகர் இண்டஸ்ட்ரீஸ், சமன் லால் சேடியா எக்ஸ்போர்ட்ஸ் மற்றும் சங்கரா பில்டர்ஸ் பிராடெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் உள்ளன.துறைகள் வாரியாக பிஎஸ்இ மெட்டல் மட்டுமே டாப் லாபம் ஈட்டியுள்ளது. அதேபோல், பிஎஸ்இ டெக் குறியீடும் அதிக நஷ்டமடைந்த குறியீடாக உள்ளது.

அதேபோல், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் சந்தை மூலதனம் சுமார் ரூ.4.45 லட்சம் கோடிகளை கொண்டுள்ளது. இதற்கிடையில், 207 பங்குகள் அதன் 52 வார உச்சத்தை எட்டிய நிலையில், 22 பங்குகள் 52 வார குறைவை பதிவு செய்துள்ளன.

இதற்கிடையில், அதிகம் வாங்கப்பட்ட 100 ரூபாய்க்கும் குறைவான பங்குகளில் இன்று முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர். அதில் மார்டன் டெய்ரிஸ் கடைசியாக வர்த்தகமான பங்குகள் விலை ரூ.70.87 ஆக உள்ளது. இது 20% ஏற்றத்தை பதிவு செய்துள்ளது. அதேபோல், ஓமன்ஷ் எண்டர்பிரைசஸ் கடைசி வர்த்தக விலை ரூ.1.62 ஆகவும் 20% ஏற்றதுடனும், அமரபள்ளி இண்டஸ்ட்ரீஸ் ரூ.19.99 கடைசி வர்த்தக விலையுடன் 20% ஏற்றத்துடனும் வர்த்தகம் செய்கின்றன. அதேபோல், என்கோட் பேக்கேஜிங் இந்தியா கடைசி வர்த்தக விலை ரூ.16.39 ஆகவும், 20% ஏற்றத்துடனும் வர்த்தகம் செய்தன. அதேபோல், பஞ்சாப் கம்யூனிகேஷன்ஸ் பங்குகள் ரூ.60.04 என்ற கடைசி வர்த்தக விலையுடன் சுமார் 20% ஏற்றத்துடன் இருந்தன.

அதேபோல், எம்மஸ்ஸர் பயோடெக் & நியூட்ரிஷியன், என்பிஆர் ஃபைனான்ஸ், டுனி டெக்ஸ்டைல்ஸ் ஆகிய பங்குகளும் 100 ரூபாய்க்கு குறைவான பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிகளவில் வாங்கியுள்ளனர்.

மேலும், விபி தேசாய் ஃபைனான்சியல் சர்வீசஸ், கொண்டார் இண்டஸ்ட்ரீஸ், பார்மைட்ஸ் பார்மாசுட்டிகல்ஸ், இண்டஸ் ஃபைனான்ஸ், ஐஐடிஎல் ப்ராஜெக்ட்ஸ், ஃப்ராசர் அண்ட் கம்பெனி, கிராவிட்டி இந்தியா, ஏசிஐ இன்ஃபோகாம் ஆகிய பங்குகள் அதன் கடைசி வர்த்தக விலையுடன் சுமார் 10% ஏற்றத்துடன் முதலீட்டாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+