ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோ முதலீடுகள் பற்றி ஏற்கனவே பல முறை படித்திருக்கிறோம். இந்திய பங்கு சந்தையில் முதலீடு செய்யும் மிகப்பெரிய முதலீட்டாளரான இவர், ஒரு பங்கினை வாங்கினால் அந்த பங்கினைக் தொடர்ந்து வாங்கி வைக்கும் சில்லறை முதலீட்டாளர்களும் உண்டு.
அந்தளவுக்கு சில வர்த்தகர்களுக்கு ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோ முதலீடுகள் மீது நம்பிக்கை உண்டு.
இந்த நிலையில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் உள்ள டாடா குழும பங்கினை வாங்கி வைக்கலாம். ஏற்கனவே கையில் ஆர்டர்கள் இருந்தால் அதனை அப்படியே வைத்திருக்கலாம் என தரகு நிறுவனங்கள் கணித்துள்ளன.
52 வார உச்சத்தில் இருந்து சரிவு
சமீபத்தில் தான் இந்த நிறுவனம் அதன் 52 வார உச்சமான 536.70 ரூபாயினை தொட்டது. எனினும் அதன் பிறகு மீண்டும் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றது. இது முதலீட்டாளர்கள் தங்களது லாபத்தினை புக் செய்வதால் இருக்கலாம். இதனால் தான் இந்த பங்கின் விலையானது சரிவில் காணப்படுகின்றது.
கொரோனாவும் ஒரு காரணம்
மேலும் இந்த நிறுவனத்தின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளியாகின. இதனால் இந்த பங்கின் விலையானது சமீபத்தில் சரிந்திருக்கலாம். இது கொரோனா காரணமாக இந்த நிறுவனம் சமீபத்திய காலாண்டுகளாகவே பலவீனமான அறிவிப்பினை கொடுத்து வருகின்றது. கடந்த ஆண்டிலும், நடப்பு ஆண்டின் தொடக்கத்திலும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் விற்பனையானது பெரும் சரிவினைக் கண்டது.
தள்ளுபடி விலையில் பங்கு
மேற்கண்ட பல காரணங்களுக்கு மத்தியில் தான் பங்கு விலையானது சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் தரகு நிறுவனம் டாடா மோட்டாரின் பங்கு விலையானது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஆக இது வாங்க சரியான நேரமே. எனினும் இன்னும் சில அமர்வுகள் கழித்தும் கூட வாங்கலாம். இன்னும் சற்று குறைவான விலையில் பங்கு கிடைக்கலாம் என சாய்ஸ் புரோக்கிங் நிறுவனத்தின் செயல் இயக்குனர் சுமீத் பகடியா லைவ் மிண்டுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மீடியம் டெர்ம் இலக்கு
மீடியம் டெர்மில் டாடா மோட்டார்ஸின் இலக்கு விலை 500 ரூபாய் எனவும், இதற்கு ஸ்டாப் லாஸ் ஆக 440 ரூபாய் என்ற லெவலை வைத்துக் கொள்ள வேண்டும்.
இதே மற்றொரு தரகு நிறுவனம், கொரோனாவுக்கு பிறகு பல நிறுவனங்களும் சரிவில் இருந்து மீளத் தொடங்கியுள்ளன.
கவலையளிக்கும் விலை அதிகரிப்பு
குறிப்பாக ஆட்டோ மொபைல் துறையில் மீண்டும் வளர்ச்சியானது வேகமெடுத்துள்ளது. எனினும் தற்போது நிலவி வரும் மூலதன பொருட்கள் பற்றாக்குறை, விலை அதிகரிப்பால் நிறுவனங்களின் விற்பனை பாதிக்கப்படலாம். எனினும் முந்தைய விற்பனையை காட்டிலும் குறைந்தாலும், வருவாய் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம்.
எப்போது வாங்கலாம்
மேலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொகுசு கார் பிரிவான ஜே.எல்.ஆரின் தேவையானது மீண்டு வந்துள்ளது. இதனால் இப்பங்கின் விலையானது மீண்டும் ஏற்றம் காண வாய்ப்புகள் அதிகம் உள்ளது. டாடா மோட்டார்ஸின் வலுவான சப்போர்ட் விகிதமானது 430 - 440 ரு ரூபாயாக உள்ளது. ஆக இந்த லெவலை அடைந்தால், நீண்டகால நோக்கில் இந்த பங்கினை வாங்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ராகேஷ் ஜுன் ஜுன்வாலா வசம்
செப்டம்பர் காலாண்டு நிலவரப்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் வசம் 3,67,50,000 பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய நிலவரம்
2.15 மணி நிலவரப்படி, டாடா மோட்டார்ஸ் பங்கின் விலையானது என்.எஸ்.இ-யில் 2.02% அதிகரித்து 468.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.
இதே பிஎஸ்.இ-ல் 1.96% அதிகரித்து, 467.80 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இன்றைய உச்ச விலை 472.10 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 463.70 ரூபாயாகும். இதே இதன் 52 வார உச்ச விலை 536.50 ரூபாயாகும். 52 வார குறைந்தபட்ச விலை 156.55 ரூபாயாகும்.
Disclaimer: மேற்கண்ட இந்த பங்கு பரிந்துரையானது நிபுணர்கள் கணித்தது என்றாலும், இதனை வாங்கும் முன்பு பரிசீலனை செய்து, உங்களுக்கு திருப்தி அளித்தால் மட்டுமே வாங்குங்கள்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications