stock recommendations: சர்வதேச சந்தையில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பங்கு சந்தையில் முதலீடு செய்யலாமா? வேண்டாமா? என்ற சந்தேகம் பலரின் மத்தியிலும் எழுந்துள்ளது.
குறிப்பாக இந்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி ஏதும் உயர்த்தப்படவில்லை. இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிக கவனமாக பார்க்கப்பட்டு வந்தது.

இதற்கிடையில் தான் சர்பிரைஸ் கொடுக்கும் விதமாக ஆர்பிஐ எந்த மாற்றமும் செய்யவில்லை. இந்த நிலையில் தான் கடந்த அமர்வில் நிஃப்டி 42 புள்ளிகள் அதிகரித்து, 17,599 என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிஎஸ்இ சென்செக்ஸ் 143 புள்ளிகள் அதிகரித்து, 59,832 என்ற லெவலையும் எட்டியுள்ளது.
இதே பேங்க் நிஃப்டி 41 புள்ளிகள் அதிகரித்து, 41,041 என்ற லெவலிலும் காணப்பட்டது. வெள்ளிக்கிழமையன்று புனித வெள்ளி காரணமாக சந்தையானது விடுமுறையாகும்.
ஐஐஎஃப்எல் செக்யூரிட்டீஸின் துணைத் தலைவர் அனுஜ் குப்தா, நிஃப்டி 50 குறியீடானது உடனடி சப்போர்ட் லெவலாக 17,400 என்ற லெவலையும், அடுத்ததாக 17,200 என்ற லெவலையும் கணித்துள்ளார். ஒரு வேளை 17,500 என்ற முக்கிய லெவலை உடைத்து விட்டால், அடுத்ததாக 17,700 என்ற லெவலையும், 17,750 என்ற லெவவலையும் உடைத்துள்ளது.
இதே 5 பங்குகளையும் அடுத்த வாரம் அதிகரிக்கலாம் என கணித்துள்ளார். இதில் முக்கிய வங்கி மற்றும் நிறுவனங்கள் அடங்கும். இதில் எஸ்பிஐ, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சன் பார்மா, டாடா மோட்டார்ஸ், பிபிசிஎல் உள்ளிட்ட பங்குகள் அடங்கும்.

டாடா மோட்டார்ஸ்: டாடா குழுமத்தினை சேர்ந்த முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ், அதன் வால்யூம் என்பது பெரும் அளவு அதிகரித்து காணப்படுகின்றது. ஆக இப்பங்கின் விலையானது வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை 460 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 424 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

எஸ்பிஐ: ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பங்கானது வங்கித் துறையில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு நிறுவனமாகும். இந்த நிறுவனம் டெக்னிக்கலாக ஏற்றம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இப்பங்கின் விலையானது அடுத்த வாரம் 560 ரூபாயினை எட்டலாம் என கணித்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் விலை 509 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 2340 என்ற பிரேக் அவுட் லெவலை கொடுத்துள்ளது. இது மீடியம் டெர்மில் 2400 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே இதன் தற்போதைய விலையில் இருந்து ஸ்டாப் லாஸ் ஆக 2284 ரூபாயாகவும் தரகு நிறுவனம் கணித்துள்ளது.

சன் பார்மா: சன் பார்மா நிறுவனம் சார்ட் பேட்டர்னில் புல்லிஷ் ஆக காணப்படுகின்றது. இப்பங்கின் விலையானது மீடியம் டெர்மில் 1060 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஸ்டாப் லாஸ் ஆக 974 ரூபாயினை தரகு நிறுவனம் கொடுத்துள்ளது.

பிபிசிஎல்: பொதுத்துறையை சேர்ந்த நிறுவனமான பிபிசிஎல் நிறுவனத்தின் பங்கு விலையானது, 380 ரூபாய் என்ற லெவலை எட்டலாம் என கணித்துள்ளது. ஸ்டாப் லாஸ் விலையானது 314 ரூபாயாகவும் உள்ளது.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

ஒரு நேர சாப்பாட்ட நிறுத்திட்டு அந்த காசுக்கு வெள்ளி வாங்கி வைங்க!! ராபர்ட் கியோசாகி அதிரடி!!

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!



Click it and Unblock the Notifications