stock recommendations: இன்றைய பங்கு சந்தை அமர்வில் இந்திய பங்கு சந்தையானது பெரியளவில் மாற்றம் காணவிட்டாலும், சென்செக்ஸ் 13.54 புள்ளிகள் அதிகரித்து, 59,846.51 புள்ளிகளாக ஏற்றம் கண்டுள்ளது. இதே நிஃப்டி 24.91 புள்ளிகள் ஏற்றம் கண்டு, 17,624.05 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.
இந்த ஏற்றமானது ஆசிய சந்தைகள் தொடர்ந்து ஏற்றம் மற்றும் அன்னிய முதலீடுகள் வரத்து என பல சாதகமான காரணிகளுக்கு மத்தியில் ஏற்றம் கண்டுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ் 7% மேலாகவும், டைட்டன் நிறுவனம், லார்சன் & டூப்ரோ, எண்டிபிசி, மஹிந்திரா & மஹிந்திரா, விப்ரோ, பவர் கிரிட், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாக உள்ளன.
இதே ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பைனான்ஸ் மற்றும் இந்தஸ் இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிவிலும் காணப்படுகிறது.
இன்றைய சந்தை அமர்வில் ஆசியாவின் மற்ற பங்கு சந்தைகள் பலவும் ஏற்றத்திலேய முடிவடைந்துள்ளன. குறிப்பாக ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட சந்தைகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
இப்படி பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் 5 பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

ஐசிஐசிஐ வங்கி
தற்போதைய சந்தை விலை 875 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 1150 ரூபாயாகும். 31% வரையில் ஏற்றம் காணலாம்.

டாடா மோட்டார்ஸ்
தற்போதைய சந்தை விலை 438 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 540 ரூபாயாகும். 23% வரையில் ஏற்றம் காணலாம்.

கோல் இந்தியா
தற்போதைய சந்தை விலை 222 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 1220 ரூபாயாகும். 21% வரையில் ஏற்றம் காணலாம்.

சன் பார்மா
தற்போதைய சந்தை விலை 1012 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 1150 ரூபாயாகும். 31% வரையில் ஏற்றம் காணலாம்.

டைட்டன்
தற்போதைய சந்தை விலை 2548 ரூபாயாகும். இதன் இலக்கு விலை 3070 ரூபாயாகும். 20% வரையில் ஏற்றம் காணலாம்.
Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications