சர்வதேச அளவிலான ஆய்வு நிறுவனமான மார்கன் ஸ்டான்லி ஒரு நிதிச் சேவை வழங்கி வரும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்கினை நீண்டகால நோக்கில் வாங்கி போடலாம் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.
இந்த பங்கினை நீண்டகால நோக்கில் வாங்கி போடலாம். அதன் இலக்கு விலையானது 2926 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இது 25% ஏற்றம் காணலாம் என்றும் கணித்துள்ளது.
முகேஷ் அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், தனது வணிகத்தினை தொடர்ந்து விரிவாக்கம் செய்து வருகின்றது. புதியதாக பல்வேறு துறைகளிலும் காலடி எடுத்து வைத்து வருகின்றது.
தற்போதைய நிலவரம்?
என்.எஸ்.இ-யில் இப்பங்கின் விலையானது 1.84% அதிகரித்து, 2381.20 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் உச்ச விலை 2387 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2335.70 ரூபாயாகவும் உள்ளது.
இதே பி.எஸ்.இ-யில் இதன் பங்கு விலையானது 1.81% அதிகரித்து, 2381.05 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதன் இன்றைய உச்ச விலை 2386 ரூபாயாகும். இன்றைய குறைந்தபட்ச விலை 2335.85 ரூபாயாகவும் உள்ளது.இதன் 52 வார உச்ச விலை 2750 ரூபாயாகவும், இதன் 52 வார குறைந்த விலை 1877.60 ரூபாயாகவும் உள்ளது.
புது பிசினஸ்
புதிய பிசினஸ் பற்றிய அறிவிப்பினை சில தினங்களுக்கு முன்பு ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி அறிவித்தார். அது ப்ளூ ஹைட்ரஜன் திட்டமாகும். இதன் மூலம் சர்வதேச் அளவில் மிகப்பெரிய போட்டியாளராக ரிலையன்ஸ் உருவெடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மிகக் குறைந்த விலையில் உற்பத்தி செய்யும் ப்ளூ ஹைட்ரஜனை, 1.2 - 1.5 டாலருக்கு விற்பனை செய்யலாம் எனவும் திட்டமிட்டுள்ளது.
ப்ளூ ஹைட்ரஜன் திட்டம்
இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பாளரான ரிலையன்ஸ், அதன் 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஆலையை மீண்டும், ப்ளூ ஹைட்ரஜன் ஆலையாக மாற்றவும் திட்டமிட்டுள்ளது. இது சர்வதேச அளவில் ரிலையன்ஸின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம். சர்வதேச நாடுகள் நிகர கார்பன் இலக்கு பூஜ்ஜியத்தினை கொண்டுள்ள நிலையில், ரிலையன்ஸுக்கு இது மிகப்பெரிய இலக்காக அமையலாம்.
மீடியம் டெர்ம் இலக்கு
ஜேபி மார்கன் நடுத்தர காலத்தில் ரிலையன்ஸ் பங்கின் விலையானது 2575 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இது தற்போதைய விலையில் இருந்து 9% அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிறுவனம் ஹைட்ரஜன் மற்றும் கெமிக்கல்கள் மீது நிறுவனம் கவனம் செலுத்துகிறது.


Click it and Unblock the Notifications