வெள்ளிக்கிழமை பங்கு சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 289.52 புள்ளிகள் என 0.82 சதவீதம் உயர்ந்து 35,535.79 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 89.95 புள்ளிகள் என 0.84 சதவீதம் உயர்ந்து 10,806.50 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டது.
எனவே வரும் வாரம் 2018 மே 14 முதல் 18 வரை எந்தப் பங்குகளை எல்லாம் வாங்கலாம் மற்றும் விற்கலாம் என்று வல்லுனர்கள் பரிந்துரைகள் குறித்து இங்குப் பார்க்கலாம்.
கண்டெய்னர் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா
இந்திய இரயில்வே அமைச்சகத்தின் கீழ் நவரத்னா பொதுத் துறை நிறுவனமாகக் கண்டெய்னர் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா கார்கோ, சேமிப்பு கிடங்கு போன்ற சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின பங்குகளை 1,400 ரூபாய்க்கு வாங்கினால் 1484 ரூபாய் வரை உயரும் என்றும் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட்
பெர்சிஸ்டண்ட் சிஸ்டம்ஸ் லிமிடெட் ஒரு பொது உடைமை ஐடி சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குகளை 792 ரூபாய் கொடுத்து வாங்கினால் 930 ரூபாய் வரை உயரும் என்று வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
எச்டிஎப்சி வங்கி
எச்டிஎப்சி வங்கி நிறுவன பங்குகளை 2011 ரூபாய் கொடுத்து வாங்கினால் 2,100 ரூபாய் வரை உயரும் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட்
டெல்லியில் இயற்கை எரிவாயு விநியோகிக்கும் நிறுவனமான இந்திரபிரஸ்தா கேஸ் லிமிடெட் பங்குகளை 264 ரூபாய்க்கு வாங்கினால் 282 ரூபாய் உயர வாய்ப்புள்ளது.
தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்
தேசிய தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் பங்குகளை விற்கலாம் என்றும் டார்கெட் விலை 162 ரூபாய் என்றும் ஸ்டாப் லாஸ் 173 ரூபாய் என்றும் வல்லுனர்கள் பரிந்துரைத்துள்ளனர்.
குறிப்பு
இங்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பங்குகள் வல்லுநர்கள் கருத்தாகும். லாபம் & நட்டம் எது அடைந்தாலும் முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ரிஸ்க்கை பொருத்தத்து. தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் பொறுப்பேற்காது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications