stocks to buy:எந்த பங்கினை வாங்கி போட்டால் லாபம் கிடைக்கும்.. எதெல்லாம் கொஞ்சம் பொறுத்து வாங்கலாம்!

சர்வதேச புரோக்கரேஜ் நிறுவனமான ஜேபி மார்கன் இந்திய சந்தையில் பல்வேறு பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

அந்த வகையில் வோடபோன் ஐடியா, மேக்ஸ் பைனான்ஷியல், பேங்க் ஆப் பரோடா, எஸ்பிஐ மற்றும் ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட பங்குகளை பரிந்துரை செய்துள்ளது. இதே கோல்ட்மேன் சாச்ஸ் பிவிஆர் பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது.

இதே பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மதிப்பினை ஜேபி மார்கன் குறைத்துள்ளது.

ஜேபி மார்கன்

ஜேபி மார்கன்

ஜேபி மார்கன் டெலிகாம் நிறுவனங்கள் அதன் 5ஜி சேவையினை விரிவாக்கம் செய்து வருகின்றன. இது டெலிகாம் நிறுவனங்களின் வளர்ச்சியினை பாதிக்கும். ஜியோ, பார்தி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்களும் அதன் வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகின்றன. இதில் பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் செயல்திறனை குறைத்துள்ளது. இதன் இலக்கு விலை 860 ரூபாயில் இருந்து, 710 ரூபாயாக குறைத்துள்ளது. இதே வோடபோனின் இலக்கு விலையை 3 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

இந்தஸ் டவர்ஸ் & மேக்ஸ் பைனான்ஷியல்

இந்தஸ் டவர்ஸ் & மேக்ஸ் பைனான்ஷியல்

இந்தஸ் டவர்ஸ் நிறுவனத்தின் இலக்கு விலை 190 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

இதே மேக்ஸ் பைனான்ஷியல் நிறுவனத்தினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலை 970 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

பேங்க் ஆப் பரோடா & எஸ்பிஐ

பேங்க் ஆப் பரோடா & எஸ்பிஐ

கிரெடிட் சூசி நிறுவனம் தொடர்ந்து சில வங்கி பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இது பேங்க் ஆப் பரோடா, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி மற்றும் இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட வங்கிகள் அடங்கும்.

தொடர்ந்து வங்கிகளின் கடன் வளர்ச்சி மேம்பட்டு வரும் நிலையில், தொடர்ந்து வாராக்கடன் விகிதமும் சரிவினைக் கண்டு வருகின்றது.

பிவிஆர்

பிவிஆர்

கோல்ட்மேன் சாச்ஸ் நிறுவனம் பிவிஆர் நிறுவனத்தினை வாங்க பரிந்துரை செய்துள்ளது. இதன் இலக்கு விலையினை 2250 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

இதே மற்றொரு தரகு நிறுவனமான ஐசிஐசிஐ டேரக்ட் சில பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. அதில் மஹிந்திரா சிஐஇ நிறுவனத்தின் இலக்கு விலையினை 410 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. இதே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இலக்கு விலை 3050 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

அன்னிய முதலீடுகள் அதிகரிக்கலாம்

அன்னிய முதலீடுகள் அதிகரிக்கலாம்

இதே ஹெச்.டி.எஃப்.சி ஏஎம்சி மற்றும் இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகளையும் பரிந்துரை செய்துள்ளது. இது தவிர மாருதி நிறுவனத்தின் இலக்கு விலை 11,200 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது.

சர்வதேச அளவில் நிலவி வரும் பதற்றமான நிலைக்கு மத்தியில், பல நாட்டின் பங்கு சந்தைகளும் தடுமாற்றத்தில் காணப்படுகின்றது. இதற்கிடையில் இந்திய சந்தையானது வலுவாக காணப்படுகின்றது. இதன் காரணமாக இந்திய சந்தைக்கு அன்னிய முதலீடுகளானது அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வளர்ச்சி அதிகரிக்கலாம்

வளர்ச்சி அதிகரிக்கலாம்

இது மேற்கண்ட நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்க காரணமாக அமையலாம். ஆக மேற்கண்ட நிறுவனங்களின் பங்குகள் விலை குறையும்போது அவை வாங்க சரியான வாய்ப்பாகவும் பார்ககப்படுகிறது. குறிப்பாக பிஎல்ஐ இந்தியா உள்ளிட்ட பல திட்டங்கள் மூலம் உற்பத்தியினை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இது நாட்டின் உற்பத்தியினை அதிகரிக்க உதவும் என்பதோடு, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். இதன் காரணமாக நிறுவனங்கள் வளர்ச்சி அதிகரிக்கலாம். இது மேற்கண்ட நிறுவனங்களின் பங்கு விலை அதிகரிக்க வழிவகுக்கலாம்.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+