மீடியம் டெர்மில் இந்த 4 பங்குகளை பாருங்க.. லாபம் பார்க்க சரியான வழி.. நிபுணர்கள் பலே கணிப்பு!

இந்திய பங்கு சந்தையானது சமீபத்திய மாதங்களாகவே ஏற்றம் கண்டு வரும் நிலையில், பல்வேறு பங்குகளும் ஏற்றம் காணத் தொடங்கியுள்ளன.

இதற்கிடையில் மீடியம் டெர்மில் இந்த 8 பங்குகளை வாங்கலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

சர்வதேச சந்தைகள் தொடர்ந்து தடுமாற்றத்தில் இருந்து வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையில் சமீபத்திய வாரங்களாகவே அன்னிய முதலீடுகள் வரத்தானது அதிகரித்துள்ளது. இந்த போக்கானது இன்னும் சில காலத்திற்கு தொடரலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்

ஃபெடரல் ரிசர்வ் வங்கி கூட்டம்

எனினும் இன்றும் நாளையும் நடக்கவிருக்கும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவினை பொறுத்து, பங்கு சந்தையில் பெரியளவில் மாற்றம் இருக்கலாம். இதன் காரணமாக இந்திய சந்தையில் இருந்து முதலீடுகள் வெளியேறுமா? என்பதும் கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

சவாலான காலகட்டம்

சவாலான காலகட்டம்

இதன் எதிரொலி கடந்த அமர்விலேயே காணப்பட்டது எனலாம். சென்செக்ஸ் நிஃப்டி ஏற்ற இறக்கத்தில் முடிவடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தகைய சவாலான சூழலில் சந்தையில் தாக்கம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்திலும் 4 பங்குகளை வாங்கிப் போடலாம் என நிபுணர்கள் சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளனர்.

பிபிசிஎல்

பிபிசிஎல்

ரிலீகேர் தரகு நிறுவனத்தின் ஆய்வாளர்கள் 4 பங்குகளை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.

பிபிசிஎல் நிறுவனத்தின் இலக்கு விலையை 375 ரூபாயினை நிர்ணயம் செய்துள்ளனர். இதன் ஸ்டாப் லாஸ் விலை 335 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளது. தற்போது எண்ணெய் நிறுவனங்களில் சற்று தடுமாற்றம் என்பது இருந்தாலும், பிபிசிஎல் பங்கு விலையில் ஒரு பிரேக் லெவலை எட்டியுள்ளது. இதன் காரணமாக இப்பங்கினை வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளனர்.

கிரசிம் இண்டஸ்ட்ரீஸ்

கிரசிம் இண்டஸ்ட்ரீஸ்

கிரசிம் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இலக்கு விலை 2020 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதன் ஸ்டால் லாஸ் விலை 1700 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சமீபத்திய காலமாக சிமெண்ட் துறையானது மீள்ச்சி காணத் தொடங்கியுள்ள நிலையில், இத்துறை சார்ந்த பங்குகளும் ஏற்றம் கண்டு வருகின்றது.

ஹெச் டி எஃப் சி ஏஎம்சி

ஹெச் டி எஃப் சி ஏஎம்சி

ஹெச் டி எஃப் சி ஏஎம்சி நிறுவனத்தின் இலக்கு விலையாக 2480 ரூபாயாக நிபுணர்கள் நிர்ணயம் செய்துள்ளனர். இதன் ஸ்டாப் லாஸ் விலை 2110 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர். இந்த பங்கின் விலையானது படிப்படியாக மெதுவாக ஏற்றம் கணலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

என்சிசி நிறுவனத்தின் இலக்கு விலையினிய 92 ரூபாயாகவும், ஸ்டாப் லாஸ் 82 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளனர்.

ஆக்ஸிஸ் வங்கி

ஆக்ஸிஸ் வங்கி

IIFL செக்யூரிட்டீஸ் நிறுவனம் சில பங்குகளை பரிந்துரை செய்துள்ளது.

ஆக்ஸிஸ் வங்கியினை பரிந்துரை செய்துள்ள நிபுணர்கள் இதன் இலக்கு விலையினை 990 ரூபாயாகவும், இதன் ஸ்டாப் லாஸ் விலையினை 887 ரூபாயாகவும் நிர்ணயம் செய்துள்ளது. இப்பங்கானது கடந்த 1 மாதத்தில் 11% அளவுக்கு லாபம் கண்டுள்ளது. இது இனியும் லாபம் கொடுக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ்

எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ்

எக்ஸைடு இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் இலக்குவிலை 220 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதன் ஸ்டால் லாஸ் ஆக 178 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளனர். இப்பங்கானது கடந்த 1 மாதத்தில் 7% லாபம் கொடுத்துள்ளது.

ஐடிசி

ஐடிசி

ஐடிசி நிறுவனத்தின் பங்கு விலையும் அதிகரிக்கலாம் என்று கணித்துள்ள தரகு நிறுவனம், அதன் இலக்கு விலையை 355 ரூபாயாக நிர்ணயம்ம் செய்துள்ளது. இதன் ஸ்டாப் லாஸ் ஆக 328 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். கடந்த 1 மாதத்தில் இந்த நிறுவனம் கிட்டதட்ட 15 சரிவினைக் கண்டுள்ளது.

ஐடிஎஃப்சி வங்கி

ஐடிஎஃப்சி வங்கி

ஐடிஎஃப்சி வங்கியின் இலக்கு விலையினை நிபுணர்கள் 72 ரூபாயாக நிர்ணயம் செய்துள்ளனர். இதன் ஸ்டாப் லாஸ் ஆக 49 ரூபாயினையும் நிர்ணயம் செய்துள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலையானது கிட்டதட்ட 3% ஏற்றம் கண்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+