இந்திய பங்குச்சந்தைகள் கடந்த வாரத்தில் ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டாலும், தொழில்நுட்ப ரீதியாக சந்தையின் கட்டமைப்பு ஏறுமுகமாகவே இருப்பதாக சந்தை நிபுணர்கள் கூறுகின்றனர். அந்த வகையில் 200 ரூபாய்க்கும் குறைவான விலை கொண்ட மூன்று பங்குகளை ஆனந்த் ரதி நிறுவனத்தின் பங்குச்சந்தை ஆய்வாளர் மெகுல் கோத்தாரி பரிந்துரைத்துள்ளார். அவை என்னென்ன என்பதை பார்க்கலாம்.
பங்குச்சந்தையின் தற்போதைய போக்கைக் கருத்தில் கொண்டு, குறுகிய கால முதலீட்டாளர்கள் பின்வரும் பங்குகளை வாங்கலாம் என பரிந்துரைத்துள்ளார். அந்த வகையில் சுஸ்லான் எனர்ஜி (Suzlon Energy) பங்கினை வாங்கலாம் என அவர் கூறுகிறார். இந்த பங்குகளை 51 ரூபாய் என்ற விலைக்கு அருகில் வாங்கலாம் என்ற்உம் 57 ரூபாய் வரை செல்ல வாய்ப்புள்ளதாகவும் கூறுகிறார் ஸ்டாப் லாஸை 48 ரூபாயில் வைக்க அறிவுறுத்துகிறார்.

அடுத்ததாக ஐடிபிஐ வங்கி (IDBI Bank) பங்கு 86 ரூபாய் என்ற விலைக்கு அருகில் வாங்கலாம், அது 95 ரூபாய் வரை செல்லும் என்றும் ஸ்டாப் லாஸ் 81 ரூபாய் வரை வைக்கலாம் என கூறியுள்ளார். ஜீ என்டர்டெயின்மென்ட் (Zee Entertainment) பங்குகளை 105 ரூபாய் என்ற விலைக்கு அருகில் வாங்கலாம் என கூறும் அவர், 117 ரூபாய் வரை இதன் மதிப்பு உயர வாய்ப்புள்ளது என கூறுகிறார்.
நிஃப்டி குறியீடு 24,000 என்ற நிலையில் வலுவான ஆதரவை பெற்றுள்ளது எனவே 24,400-க்கு மேல் உறுதியாக நிலைபெற்றால் மட்டுமே புதிய ஏற்றத்தை காண முடியும் என மெகுல் கோத்தாரி குறிப்பிடுகிறார். அதுவரை முதலீட்டாளர்கள் Buy on Dips என்ற உத்தியை பின்பற்றலாம் என அவர் ஆலோசனை வழங்கியுள்ளார். பேங்க் நிஃப்டி பொறுத்தவரை, 57,000 என்பது முக்கிய ஆதரவு மண்டலமாக உள்ளது என கூறுகிறார். 59,000 என்பது முக்கியமான ரெஸிஸ்டென்ஸாக உள்ளது. இந்த வரம்புக்குள் சந்தை வர்த்தகமாகும் வரை, முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர் எச்சரித்துள்ளார்.
கடந்த வாரம் தொடக்கத்தில் இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தைகள் வெள்ளி அன்று நல்ல ஏற்றம் கண்டன. குறிப்பாக சென்செக்ஸ் 965 புள்ளிகள் உயர்ந்து 78,151.45 புள்ளிகளுடன் வர்த்தகத்தை முடித்தது, நிஃப்டி 50 மொத்தமாக 262 புள்ளிகள் உயர்ந்து, 24,334.30 புள்ளிகளுடன் முடிந்தது. இந்த வாரமும் பங்குச்சந்தை ஏற்றத்துடன் காணப்பட்டால் நீண்ட கால இழப்புகளில் இருந்து முதலீட்டாளர்களுக்கு சற்றே நிம்மதி கிடைக்கும். ஆனால் ஈரான் மோதலை பொறுத்து தான் இது மாறும்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications

