stocks to buy: லாபம் பார்க்க வங்கி பங்குகளை வாங்கி போடலாம்.. நிபுணர்கள் சூப்பர் பரிந்துரை!

stocks to buy: பேங்க் நிஃப்டி குறியீடானது 2022ல் 21% மேலாக ஏற்றம் கண்டுள்ளது. இதற்கிடையில் வங்கி பங்குகள் நல்ல ஏற்றம் கண்டுள்ள நிலையில், இந்த வங்கி பங்குகளில் புராபிட் புக்கிங் செய்யலாமா? அல்லது இருக்கும் பங்குகளை அப்படியே ஹோல்ட் செய்யலாமா? என்ற கேள்வியானது முதலீட்டாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இத்தகைய குழப்பத்தின் மத்தியில் 2023ல் ஆண்டிலும் தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சில நிபுணர்கள் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளில் கடன் வளர்ச்சி விகிதமானது, தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது.

இந்திய வங்கிகளுக்கு ஆதரவு

இந்திய வங்கிகளுக்கு ஆதரவு

எனினும் மோசமான கடன் வளர்ச்சியும் கவனிக்க வேண்டியதாக உள்ளது. ஆக இது கவனிக்க வேண்டிய விஷயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. டாலர் மதிப்பானது எளிதாகி வரும் நிலையில், பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வெளிநாட்டு கடனை விரும்புகின்றன. இது இந்திய வங்கிகளுக்கும் சாதகமாக நீண்டகால நோக்கிலும், நடுத்தர காலத்திலும் ஆதரவாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 தனியார் வங்கிகளுக்கு  ஆதரவு

தனியார் வங்கிகளுக்கு ஆதரவு

எனினும் தனியார் வங்கிகளின் பங்கு இன்னும் முக்கியமானதாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி போன்ற சில தனியார் வங்கிகள் இந்தியாவில் வளர்ந்து வரும் வணிக மாதிரியால் பலன் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாங்க பரிந்துரை

வாங்க பரிந்துரை

ஆக வங்கி துறையில் லாபம் பார்க்க நடுத்தர அளவிலான பொதுத்துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளை வாங்க பரிந்துரை செய்துள்ளன.

இந்த பரிந்துரை பட்டியலில் யெஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐடிஎஃப்சி பர்ஸ்ட் வங்கி, பேங்க் ஆப் பரோடா உள்ளிட்ட பங்குகளையும் வாங்க பரிந்துரை செய்துள்ளது.

 பொதுத்துறை வங்கி பங்குகள்

பொதுத்துறை வங்கி பங்குகள்


எனினும் இந்த வங்கித்துறையினை பொறுத்தவரையில் மோசமான கடன் என்பது சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

ஹெச் டி எஃப் சி வங்கி லிமிடெட்-ன் முன்னாள் துணைத் தலைவர், மத்திய அரசின் மோசமான கடன் திட்டம், தனியார் வங்கிகளுடன் பொருந்தக் கூடிய வகையில், பொதுத் துறை வங்கிகளின் சந்தை உள்ளது. இது தனியார் வங்கிகளுடன் ஒப்பிடும்போது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஆக பொதுத்துறை வங்கி பங்குகள் வாங்க சரியான வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

 மார்ஜின் மேம்படலாம்

மார்ஜின் மேம்படலாம்

தொடர்ந்து கடன் வளர்ச்சியானது அதிகரித்து வரும் நிலையில், வங்கிகளின் மார்ஜின் விகிதமானது மேம்பட்டு வருகின்றது. இது வங்கி பங்குகளை நடுத்தர காலத்திலும் நீண்டகால நோக்கிலும் அதிகரிக்க காரணமாக அமையலாம்.

மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி எஃப்சி வங்கி மற்றும் ஐடிஎஃப்சி வங்கி உள்ளிட்ட பங்குகள் கவனம் செலுத்த வேண்டிய பங்குகளாக பரிந்துரை செய்துள்ளது.

யெஸ் வங்கி

யெஸ் வங்கி

யெஸ் வங்கியின் நிர்வாகம் மாற்றப்பட்ட பிறகு தொடர்ந்து நல்ல வளர்ச்சியினை கண்டு வருகின்றது. இது மேற்கோண்டு இவ்வங்கியின் வளர்ச்சியானது நன்றாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.அடுத்த 4 மற்றும் 5 ஆண்டுகளில் இப்பங்கின் விலையானது 60 ரூபாய் என்ற லெவல் அல்லது 200% அளவுக்கு ஏற்றம் காணலாம்.

எஸ்.எம்.சி குளோபல்

எஸ்.எம்.சி குளோபல்

எஸ்.எம்.சி குளோபல் செக்யூரிட்டீஸின் துணைத் தலைவர் சவுரப் ஜெயின், பொதுத்துறை வங்கிகளில் கனரா வங்கி, எஸ்பிஐ, பேங்க் ஆப் பரோடாவையும், இதே பொதுத்துறை வங்கிகளில் ஆக்ஸிஸ் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி உள்ளிட்ட பங்குகளை மீடியம் டெர்ம் மற்றும் நீண்டகால நோக்கில் வாங்கலாமென பரிந்துரை செய்துள்ளது. இது சில்லறை முதலீட்டாளர்கள் ரிஸ்க் அதிகம் எடுக்க நினைப்பவர்கள் மட்டும் பேங்க் ஆப் பரோடா பங்குகளை வாங்கலாம்.

குறுகிய கால அளவு

குறுகிய கால அளவு


இதே பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் பாங்க் ஆப் மகாராஷ்டிரா பங்குகளை தற்போதைய லெவலில் வாங்கலாம் என பரிந்துரை செய்துள்ளது. இதில் பிஎன்பி பங்கு விலையானது இரட்டை இலக்கை எட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறுகிய காலத்தில் இருந்து மீடியம் டெர்மில் 40 ரூபாய் அதிகரிக்கலாம் என்றும், பங்குதாரர்களுக்கு 30% வருவாய் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer : Greynium Information Technologies, the author are not liable for any losses caused as a result of decisions based on the article. Tamil.Goodreturns.in advises users to check with experts before taking any investment decisions.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+