இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய 10 பங்குகளின் பட்டியலை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர்.
ஹெச்டிஎஃப்சி வங்கி: தனியார் துறையை சேர்ந்த ஹெச்டிஎஃப்சி வங்கியானது 50,000 கோடி ரூபாய் நிதியினை பத்திரங்கள் மூலம் அடுத்த 12 மாதங்களில் திரட்ட திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் இவ்வங்கியின் இயக்குனர்கள் குழுவானது ஏப்ரல் 15, 2023 அன்று கூட உள்ளது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என தெரிகிறது.

ஓஎன்ஜிசி: இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பாளரான ஓஎன்ஜிசி, தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்து வருகின்றது. இது பொகாரோ நிலக்கரி படுக்கை மீத்தேன் பிளாக்கில் புதிய எரிவாயு சேகரிப்பு நிலையத்தை தொடங்கியுள்ளது. இது பொகாரோ நிலக்கரி படுக்கை பகுதியில் முதல் சேகரிப்பு மையமாகும். ஆக இது நிறுவனத்தின் எதிர்கால வளர்ச்சிக்கு துணை புரியலாம்.
எல்ஐசி: நாட்டின் முன்னணி பொதுத்துறை இன்சூரன்ஸ் நிறுவனமான எல்ஐசி, அதன் உயர்மட்ட மற்றும் முதலீட்டு கட்டமைப்பை மேம்படுத்த முடிவு செய்து சில முக்கிய அதிகாரிகளை நியமித்துள்ளது. இதில் ரத்னாகர் பட்நாயக் என்பவரை தலைமை முதலீட்டு அதிகாரியாக நியமித்துள்ளது. இதே CIO ஆக இருந்த பிஆர் மிஸ்ரா-வுக்கு பதிலாக ரத்னாகர் பட்நாயக் நியமிக்கப்பட்டுள்ளதாக பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதானி எண்டர்பிரைசஸ்: அதானி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம், அதன் துணை நிறுவனமான பெல்மா கோலியரீஸ் லிமிடெட் நிறுவனத்தினை இணைத்துள்ளது. இதில் ஆரம்ப அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் 10,00,000 ரூபாய் மற்றும் செலுத்தப்பட்ட பங்கு மூலதனம் என்பது 5,00,000 ரூபாய் என்றும் பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் அதன் நிலக்கரி உள்ளிட்ட பல முக்கிய வணிக நடவடிக்கைகள் வளர்ச்சி காணலாம் என தெரிவித்துள்ளது.
டெல்லிவரி: அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான டைகர் குளோபல் மேனேஜ்மென்ட் மூலம் நிர்வகிக்கப்படும், இண்டர்நெட் ஃபண்ட் III பிரைவேட் லிமிடெட், டெல்லிவரியில் பங்குகளை வாங்கியுள்ளது. ஒபன் மார்கெட் மூலமாக செய்யப்பட்ட இந்த பரிவர்த்தனையானது, ஒரு பங்குக்கு 330 ரூபாய் விலையில், 11,753,735 பங்குகளை வாங்கியுள்ளதாகவும் தெரிகிறது. இண்டர்நெட் ஃபண்ட் III டிசம்பர் 2022 நிலவரப்படி டெல்லிவரியில் 3.41 கோடி பங்குகள் அல்லது 4.68% பங்குகளை வைத்திருந்தது.
சூலா வைன்யார்ட்ஸ்: நாட்டின் மிகப்பெரிய ஒயின் உற்பத்தியாளரான சூலா வைன்யார்ட்ஸ், மார்ச் 2023 காலாண்டு முடிவினைக் வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி இது அதன் சொந்த பிராண்ட் மற்றும் ஒயின் சுற்றுலா வணிகம் என இரண்டிலுமே இதுவரையில் இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தினை எட்டியுள்ளது. தனது சொந்த பிராண்டு விற்பனையில் 15% அதிகரித்து, 104.3 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதே கடந்த நிதியாண்டில் 90.7 கோடி ரூபாயாக இருந்தது. மற்ற பிரிமீயம் பிராண்டுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது.
கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன்: கல்பதரு பவர் டிரான்ஸ்மிஷன் (KPTL) கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 3079 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்களை பெற்றுள்ளது. இந்த ஆர்டர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்டா கார்ப்: கேசினோ கேமிங் நிறுவனமான டெல்டா கார்ப், கடந்த ஆண்டினை காட்டிலும் 4வது காலாண்டில் 6.4% எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டு, லாபம் 51.17 கோடி ரூபாய் எனும் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஒருங்கிணைந்த வருவாய் விகிதமானது 4% எனும் அளவுக்கு வளர்ச்சி கண்டு, 227.16 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே வரிக்கு முந்தைய எபிட்டா விகிதமானது 12.8% எனும் அளவுக்கு குறைந்து, 60.18 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
அபான்ஸ் ஹோல்டிங்: அபான்ஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் தொடர்ந்து தனது வணிகத்தினை விரிவாக்கம் செய்யும் விதமாக சில கையகப்படுத்தல்களையும் செய்துள்ளது. இது குறித்து பங்கு சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையிலும் தெரிவித்துள்ளது.
என்எல்சி இந்தியா: என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக பிரசன்ன குமாரை நியமிப்பதற்காக பங்குதாரர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர்.ஆக இதுவும் இந்த நிறுவனத்தில் கவனிக்க வேண்டிய ஒன்றாக உள்ளது..
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications