இன்று சென்செக்ஸ் மெல்ல ஏற்றப் பாதைக்குத் திரும்பி இருக்கிறது. சென்செக்ஸ் தற்போது 526 புள்ளிகள் ஏற்றம் கண்டு 37,914 புள்ளிகளில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. ஆக கடந்த வெள்ளிக் கிழமையில் கண்ட ஏற்றம், இன்னும் சென்செக்ஸில் மிச்சம் இருப்பதாகவே தெரிகிறது.
இன்று, மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் 2,450 பங்குகள் வர்த்தகமாகின்றன. 1,750 பங்குகள் ஏற்றத்திலும், 555 பங்குகள் இறக்கத்திலும், 145 பங்குகள் விலை மாற்றம் இன்றியும் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன.
78 பங்குகள், இன்றைய வர்த்தகத்தில் தன் 52 வார உச்ச விலையைத் தொட்டு இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இன்றைய ஏற்றத்தில் எந்த பங்குகளை எல்லாம் கவனிக்க வேண்டும் எனப் பார்க்க இருக்கிறோம்.

Reliance Industries: முகேஷ் அம்பானியின் வணிக சாம்ராஜ்யமான ரிலையன்ஸ் குழுமத்தின் ஒரு பகுதி தான் ரிலையன்ஸ் ரீடெயில். ரிலையன்ஸ் ரீடெயில் கம்பெனியில், அமெரிக்காவின் சில்வர் லேக் என்கிற கம்பெனி சுமாராக 7,500 கோடி ரூபாய் முதலீடு செய்து இருக்கிறது. எனவே ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் மீது ஒரு கண் வைத்துக் கொள்ளலாம். தற்போது இந்த பங்கு விலை 0.74 % ஏற்றத்தில், 2,219 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.
Lakshmi Vilas Bank: தடுமாறிக் கொண்டு இருக்கும் லட்சுமி விலாஸ் வங்கியை, தற்காலிகமாக நிர்வகிக்க, 3 பேர் கொண்ட இயக்குநர் கமிட்டிக்கு (Committee of Directors), நேற்று (27 செப்டம்பர் 2020) அனுமதி கொடுத்து இருக்கிறது ஆர்பிஐ. தற்போது லட்சும் விலாஸ் வங்கி 0.26 % இறக்கத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பங்கு விலை 19.15 ரூபாய்.
Mindtree: இந்த கம்பெனியின் துணை நிறுவனர் கிருஷ்ணகுமார் நடராஜன் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் வைத்திருக்கும் மைண்ட் ட்ரீ கம்பெனியின் பங்குகளில் 4.66 லட்சம் பங்குகளை விற்று இருக்கிறார்கள். தற்போது கிருஷ்ணகுமார் & அவரின் குடும்பத்தினர்களின் பங்கு, மைண்ட் ட்ரீயின் மொத்த பங்குகளில் 2.01 சதவிகிதமாக குறைந்து இருக்கிறது. தற்போது மைண்ட் ட்ரீ பங்கு விலை 1.9 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பங்கு விலை 1,285 ரூபாய்.
Vodafone Idea: ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல்லின் கடுமையான போட்டியால் தடுமாறிக் கொண்டு இருக்கும் வொடாபோன் ஐடியா, தன் 3ஜி வாடிக்கையாளர்களை பல்வேறு கட்டங்களாக 4ஜி நெட்வொர்க்குக்கு மாற்ற இருப்பதாகச் சொல்லி இருக்கிறது. தற்போது பங்கு விலை 0.49 % ஏற்றத்தில் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது. பங்கு விலை 10.30 ரூபாய்.


Click it and Unblock the Notifications