பங்குச் சந்தையில் பணம் சம்பாதிக்க விரும்புவர்கள் மிக குறைவான விலையில் பங்குகளை வாங்க யோசனை செய்வதும் உண்டு. பொதுவாக பங்குச் சந்தையில் பெரிய முதலீடுகள் தேவைப்படும் என்ற அச்சத்திலானே சிலர் பங்குச் சந்தை பக்கம் செல்வதில்லை. குறைந்த முதலீட்டை சரியாக செய்து பெரிய வருமானம் ஈட்டும் உத்தியை சிலர் மட்டுமே பி்ன்பற்றுகின்றனர். அவர்கள் மட்டுமே சம்பாதிக்கவும் செய்கின்றனர். இந்த நிலையில், நீங்களும் பங்குச் சந்தையில் சம்பாதிக்க, குறைந்த விலையில் பங்குகளை வாங்குவதற்கு 100 ரூபாய்க்கும் குறைவான சில பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த 100 ரூபாய்க்கும் குறைவான பங்குகள் எதிர்காலத்தில் வளர்ச்சியடையும் வாய்ப்புகள் உள்ளன. இந்த பங்குகளின் விலை, அவற்றின் போக்குகள், ஊகங்கள் மற்றும் அடிப்படை பகுப்பாய்வுகள் அடிப்படையில் சில பங்குகளை ஆய்வாளர்கள் கொடுத்துள்ளனர்.

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்கு: இந்தியன் ஓவர்சிஸ் பங்குகள் 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் தற்போதைய விலை ரூ.49.67 ஆக உள்ளது. இதன் 52 வார அதிகபட்ச விலை ரூ.83.75 ஆகவும், இதன் 52 வார குறைந்தபட்ச விலை ரூ.38.95 ஆகவும் உள்ளது. சந்தை மூலதனம் ரூ.93,226 கோடியாக உள்ளது.
கனரா வங்கி: கனரா வங்கி பங்குகளும் 100 ரூபாய்க்கும் குறைவாக வர்த்தகமாகும் பங்கு ஆகும். இதன் தற்போதைய விலை ரூ.97.67 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் 52 வார அதிகபட்ச விலை ரூ128.90 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ.77.80 ஆகவும் உள்ளது. இதன் சந்தை மூலதனம் ரூ.89.191 கோடியாக உள்ளது.
ஐடிபிஐ வங்கி: ஐடிபிஐ வங்கியின் தற்போதைய விலை ரூ.77.08 ஆக உள்ளது. 52 வார அதிகபட்ச விலை ரூ.107.90 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ.59.50 ஆக உள்ளது. சந்தை மூலதனம் ரூ.82,599 கோடியாக உள்ளது.
சுஸ்லான் எனர்ஜி: சுஸ்லான் எனர்ஜி பங்கு விலை ரூ.56.73 ஆக வர்த்தகம் செய்யப்படுகிறது. இதன் 52 வார அதிகபட்ச விலை ரூ.86.04 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ.33.90 ஆகவும் வர்த்தகமாகிறது. இதன் சந்தை மூலதனம் ரூ.73,135 கோடியாக உள்ளது.
யெஸ் வங்கி: யெஸ் வங்கியின் பங்குகள் சுமார் 20 ரூபாய் குறைவான பங்கு ஆன உள்ளது. இதன் தற்போதைய பங்கு விலை ரூ.19.37 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதன் 52 வார அதிகபட்ச விலை ரூ.32.85 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ.19.02 ஆகவும் வர்த்தகமாகி வருகிறது. இதன் சந்தை மதிப்பு ரூ.59,781 கோடியாக உள்ளது.
வோடபோன் ஐடியா: வோடபோன் ஐடியா பங்கு 10 ரூபாய்க்கும் குறைவாக உள்ளது. இந்த பங்கின் தற்போதைய விலை ரூ.7.37 ஆக வர்த்தகமாகி வருகிறது. இதன் 52 வார அதிகபட்ச விலை ரூ.19.18 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ.7.33 ஆகவும் உள்ளது. இதன் சந்தை மூலதனம் ரூ.51,229 கோடியாக உள்ளது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க்: ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி பங்கின் தற்போதைய விலை ரூ.63.25 ஆக உள்ளது. இந்த பங்கின் 52 வார அதிகபட்ச விலை ரூ.92.45 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ.59.30 ஆகவும் உள்ளது. இதன் சந்தை மூலதனம் ரூ.45,563 கோடியாக உள்ளது.
யுகோ வங்கி: யுகோ வங்கி பங்குகள் தற்போது ரூ.41.43 என்ற விலையில் உள்ளது. இதன் 52 வார அதிகபட்ச விலை ரூ.70.65 ஆகவும், 52 வார குறைந்தபட்ச விலை ரூ.36.75 ஆகவும் உள்ளது. இதன் சந்தை மூலதனம் ரூ.49,748 கோடியாக உள்ளது.
ரூ.100க்கும் குறைவான டாப் 5 பங்குகள்: உஜ்ஜீவன் ஸ்மால் ஃபைனான்ஸ், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க், மகாராஷ்டர பேங்க், ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், ஐஆர்பி இன்ஃப்ராஸ்ட்ரக்சர் டெவலப்பர்ஸ் உள்ளிட்ட பங்குகள் 100 ரூபாய்க்கும் குறைவான முதலீட்டாளர்களால் அதிகம் வாங்கப்பட்ட டாப் பங்குகளாக உள்ளன.


Click it and Unblock the Notifications