STT உயர்வு பங்கு முதலீட்டாளரை எப்படி பாதிக்கும்.. இதுதான் உண்மையான கணக்கு..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1, 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2026இல் ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) வர்த்தகத்தில் செக்யூரிட்டீஸ் டிரான்சாக்ஷன் டேக்ஸ் (STT) கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்துக்கு STT 0.02 சதவீதத்திலிருந்து 0.05 சதவீதமாகவும், ஆப்ஷன்ஸ் வர்த்தகத்துக்கு 0.10 சதவீதத்திலிருந்து 0.15 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வால் வர்த்தக செலவு கணிசமாக அதிகரித்து, பிரேக்-ஈவன் காஸ்ட்-ல் பஞ்சாயத்து உருவாகியுள்ளது.

STT உயர்வு பங்கு முதலீட்டாளரை எப்படி பாதிக்கும்.. இதுதான் உண்மையான கணக்கு..!!

NIFTY50 ஃபியூச்சர்ஸ் ஒரு லாட் (65) வர்த்தகத்துக்கு, முன்பு ரூ.325 STT இருந்தது. இப்போது ரூ.817 ஆக உயர்ந்துள்ளது. ரூ.1 லட்சம் வர்த்தக அளவுக்கு STT ரூ.20லிருந்து ரூ.50 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பிரேக்-ஈவன் காஸ்ட் (breakeven cost) 5 புள்ளிகளிலிருந்து 12 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. பிப்ரவரி மாதத்திற்கான லாட் சைஸ் 65, இதன் மூலம் 325/65= 5 புள்ளிகள்.

பிரேக்-ஈவன் காஸ்ட் (Breakeven Cost) என்பது ஒரு F&O வர்த்தகத்தில் லாபமோ நஷ்டமோ இல்லாமல் சரியாக சமநிலை அடையும் விலை நிலை ஆகும். இதில் பிரீமியம் (premium), புரோக்கரேஜ், STT, வரி போன்ற அனைத்து வர்த்தக செலவுகளும் சேர்க்கப்படுகின்றன. தற்போது STT அதிகரித்துள்ளதால் பிரேக்-ஈவன் காஸ்ட் அதிகரித்துள்ளது.

இதேபோல் ஆப்ஷன்ஸ் பிரீமியம் வர்த்தகத்திலும் STT உயர்வு ஏற்பட்டுள்ளது. ரூ.100 பிரீமியம் கொண்ட NIFTY கால் ஆப்ஷனுக்கு முன்பு ரூ.6.5 STT இருந்தது. இப்போது ரூ.9.75 ஆக உயர்ந்துள்ளது. இது வர்த்தகர்களின் செலவை அதிகரிக்கிறது.

இந்த உயர்வு F&O வர்த்தக அளவை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தக அளவு குறைவதால் புரோக்கரேஜ் நிறுவனங்கள், பரிமாற்றங்கள் (exchanges) பெரும் பாதிப்பை சந்திக்கும். AMC நிறுவனங்கள் (HDFC AMC, ICICI Pru AMC, 360 One போன்றவை) டெரிவேட்டிவ்களை ஹெட்ஜிங்குக்கு பயன்படுத்துவதால் அவற்றின் இயக்கச் செலவு அதிகரிக்கும்.

நீங்கள் லாங் கால் (Long Call) வாங்கினால், பிரேக்-ஈவன் விலை = ஸ்ட்ரைக் விலை + செலுத்திய பிரீமியம் + வர்த்தக செலவுகள். அதாவது, ஸ்ட்ரைக் விலையை விட அதிகமாக அடிப்படை சொத்து (underlying) உயர்ந்தால் மட்டுமே லாபம் கிடைக்கும்.

லாங் புட் (Long Put) வாங்கினால், பிரேக்-ஈவன் விலை = ஸ்ட்ரைக் விலை - செலுத்திய பிரீமியம் - வர்த்தக செலவுகள். ஸ்ட்ரைக் விலையை விட குறைவாக அடிப்படை சொத்து வீழ்ந்தால் மட்டுமே லாபம் வரும்.

ஷார்ட் கால் (Short Call) விற்றால், பிரேக்-ஈவன் விலை = ஸ்ட்ரைக் விலை + பெற்ற பிரீமியம் - வர்த்தக செலவுகள். ஸ்ட்ரைக் விலைக்கு மேல் செல்லாவிட்டால் லாபம் கிடைக்கும்.

ஷார்ட் புட் (Short Put) விற்றால், பிரேக்-ஈவன் விலை = ஸ்ட்ரைக் விலை - பெற்ற பிரீமியம் + வர்த்தக செலவுகள். ஸ்ட்ரைக் விலைக்கு கீழே போகாவிட்டால் லாபம் உண்டு.

இப்படி ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் பிரேக்-ஈவன் விலை = நுழைவு விலை +/- வர்த்தக செலவுகள். செலவுகள் சேர்த்தால் லாபம் பார்க்க வேண்டிய விலை மாறுபடும்.

இந்த பிரேக்-ஈவன் கணக்கு வர்த்தகர்களுக்கு மிக முக்கியம். STT, புரோக்கரேஜ் போன்ற செலவுகள் அதிகரிக்கும்போது பிரேக்-ஈவன் விலை உயரும். எனவே லாபம் பார்க்க அதிக விலை மாற்றம் தேவைப்படும்.

சாமானிய மக்கள் F&O வர்த்தகம் செய்யும் போது இந்த செலவுகளை கணக்கில் வைத்து திட்டமிடுவது அவசியம். இல்லையெனில் லாபம் வருவது கடினமாகிவிடும்.

இந்த உயர்வு பொதுவாக பங்குச் சந்தை முதலீட்டாளர்களுக்கு எதிரானது என்பதால், இந்த வரி உயர்வு வர்த்தக அளவு குறைவதால் சந்தை செயல்பாடு குறையும். வருவாய் அதிகரிப்பதை விட வர்த்தக அளவை கட்டுப்படுத்துவதே அரசின் நோக்கம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சாதாரண மக்களுக்கு இது பங்கு முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டிய சூழலை உருவாக்கியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+