இந்தியாவின் மிகப்பெரிய ஹெல்மெட் உற்பத்தியாளரான ஸ்டட்ஸ் அக்சஸரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஐபிஓ ஒதுக்கீடு நவம்பர் 4, 2025 செவ்வாய்க்கிழமை மாலை வெளியாகும். MUFG இன்டைம் இந்தியா, NSE, BSE தளங்களில் ஒதுக்கீடு நிலையை ஆன்லைனில் பார்க்கலாம்.
455.49 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஐபிஓ, முழுவதும் OFS முறையில் பங்குகள் விற்கப்பட்டு உள்ளது. சுமார் 73.25 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெற்ற இந்த ஐபிஓ, QIB பிரிவில் 159.99 மடங்கு, NII பிரிவில் 76.99 மடங்கு, ரீடைல் முதலீட்டாளர்களிடம் 22.09 மடங்கு சப்ஸ்கிரிப்ஷன் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஸ்டட்ஸ் அக்சஸரீஸ், 2023-24 நிதியாண்டில் வருவாய் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கர வாகன ஹெல்மெட் உற்பத்தியாளர். 2024 காலாண்டில் விற்பனை அளவிலும் முதலிடம் பிடித்தது என்று CARE அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஐபிஓ-வில் ஒரு பங்கு விலை ரூ.557 முதல் ரூ.585 வரை நிர்ணயிக்கப்பட்டது. ஒரு லாட் 25 பங்குகளைக் கொண்டது. இந்த ஐபிஓ மூலம் 7,786,120 பங்குகள் விற்பனைக்கு வந்தன. இதில் யாருக்கெல்லாம் பங்குகள் அலாட் செய்யப்படும் என்பது இன்று மாலை தெரியவரும்.
கிரே மார்க்கெட் பிரீமியம்
ஸ்டட்ஸ் அக்சஸரீஸ் ஐபிஓவின் GMP ரூ.70 என்ற நிலையில் உள்ளது. அப்பர் பேன்ட் விலை ரூ.585-ஐ கருத்தில் கொண்டு கணக்கிட்டால் இந்நிறுவனத்தின் பங்குகள் ரூ.655 என்ற விலையில் பட்டியலிடப்படும் என கணிக்கப்படுகிறது. இது 11.97 சதவீத பிரீமியம் விலை என்பதால் இந்த ஐபிஓ-வில் முதலீடு செய்வதவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
ஒதுக்கீடு நிலையை செக் செய்வது எப்படி?
ஒதுக்கீடு நிலையை NSE, BSE, MUFG இன்டைம் இந்தியா தளங்களில் ஆன்லைனில் பார்க்கலாம்.
NSEயில் 'Equity & SME IPO bid details' பகுதியில் 'STUDDS' தேர்வு செய்து PAN, விண்ணப்ப எண் உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
BSEயில் 'Equity' தேர்வு செய்து 'Studds Accessories Limited' தேர்ந்து PAN அல்லது விண்ணப்ப எண் உள்ளிட்டு தேடவும்.
நவம்பர் 6 அன்று தேர்வு செய்யப்பட்ட முதலீட்டாளர்களின் டிமேட் கணக்கில் பங்குகள் கிரெடிட் செய்யப்படும், மற்ற முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப கொடுக்கப்படும். நவம்பர் 7 ஆம் தேதி அன்று BSE, NSEயில் பட்டியலிடப்பட்டு காலை10 மணிக்கு இதன் வர்த்தகம் துவங்கும்.
ஸ்டட்ஸ் ஐபிஓ-வின் வலுவான சப்ஸ்கிரிப்ஷன் மற்றும் GMP, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கிறது. நிறுவனத்தின் சந்தை ஆதிக்கம் மற்றும் ஹெல்மெட் தேவை, நீண்டகால வளர்ச்சியை உறுதி செய்கிறது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications