Momo வித்து 25 கோடி ரூபாய் சம்பாதித்த லோயர் மிடில் கிளாஸ் இளைஞன்..!! அடேங்கப்பா..!

இந்தியாவில் தற்போது மோமோ எனப்படும் உணவுப் பொருள் மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. எனவே மோமோவை அடிப்படையாகக் கொண்ட உணவு விற்பனை நிலையங்களை நாம் பரவலாக காண முடிகிறது. அந்த வகையில் மோமோமியா என்பது புகழ்பெற்ற ஒரு மோமோ விற்பனை பிராண்டாக செயல்பட்டு வருகிறது.

ஒரு சிறிய அளவில் தொடங்கப்பட்ட மோமோமியா நிறுவனம் தற்போது ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருமானம் ஈட்டும் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமானவர் அதன் உரிமையாளரான டெபாசிஸ் மஜும்ந்தர்.

 Momo வித்து 25 கோடி ரூபாய் சம்பாதித்த லோயர் மிடில் கிளாஸ் இளைஞன்..!! அடேங்கப்பா..!

அசாம் மாநிலம் கௌஹாத்தியை சேர்ந்தவர் தான் டெபாசிஸ். இவர் ஒரு லோயர் மிடில் கிளாஸ் குடும்பத்தில் பிறந்தவர். சிறுவயதிலிருந்தே சுயதொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.

"உனக்கென ஒரு பிராண்டை உருவாக்கு, பணம் உன்னை தானாக தேடி வரும்" என ஒருமுறை இவருடைய தாத்தா கூறினாராம். அதை தாரக மந்திரமாக கொண்டு தான் இவர் தொழிலில் முன்னேறி இருக்கிறார். முதலில் தன்னுடைய குடும்பத்தின் நிதிநிலைமை காரணமாக இவர் வழக்கமான வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

இதனால் இவருடைய சுய தொழில் கனவுக்கு முட்டுக்கட்டை விழுந்தது. வங்கியில் கல்லூரி படிப்பை முடித்தவுடன் மாதந்தோறும் 1800 ரூபாய் சம்பளத்தில் இவர் வங்கியில் வேலைக்கு சென்றார். மாதத்திற்கு 1 லட்சம் ரூபாய் சம்பளம் வரை பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றார்.

ஆனால் அந்த வேலை அவருக்கு எந்த திருப்தியும் அளிக்கவில்லை. எனவே 2016 ஆம் ஆண்டில் வங்கி வேலையை விடுத்து விட்டு ஐஸ்கிரீம் தயாரிக்கும் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால் அந்த தொழில் அவருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி தந்ததோடு மட்டுமில்லாமல் 8 லட்சம் ரூபாய் கடனில் விட்டுச் சென்றது. வாழ்க்கை மிகவும் கடினமானதாக மாறிய அந்த சூழலில் தன்னுடைய தாயாருக்கு மருத்துவ செலவுக்கு கூட பணம் இல்லாமல் இவர் தவித்தாராம்.

அப்போது கௌகாத்தியில் ஒரு உணவகத்தில் மோமோ குறைந்த தரத்தில் விற்பனை செய்வதை கவனித்தார். அப்போதுதான் இவருக்கு மோமோக்களின் சந்தை குறித்து தெரிய வந்தது. 2018 ஆம் ஆண்டில் 3.5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி கௌஹாத்தியில் மோமோமியா கடையை தொடங்கினார். தொடக்கத்தில் பல்வேறு சவால்களை சந்தித்தாலும் 2020 ஆம் ஆண்டு இரண்டாவது கடையை இவர் தொடர்ந்தார்.

தற்போது இந்தியாவில் 200க்கும் அதிகமான மோமோமியா கடைகள் செயல்பட்டு வருகின்றன. ஃபிரெஞ்சைஸ் முறையில் பலரும் ஆர்வத்துடன் வந்து இந்த தொழிலை செய்ய முன் வருகிறார்கள் என டெபாசிஸ் கூறுகிறார்.

இவர் 2.5 லட்சம் ரூபாய் வழங்கினால் இந்த கடைக்கான அனைத்து செட் அப்களையும் செய்து தந்து விடுவாராம். மொத்த விற்பனையில் 5% இவருக்கு பங்கு தர வேண்டும் என கூறுவாராம். தற்போது இவர் ஆண்டுக்கு 25 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்.

இவருக்கு கீழ் 400 பேர் வேலை செய்கின்றனர். வாழ்க்கையில் எத்தனை தோல்விகள் வந்தாலும் மன உறுதியுடன் விடாமுயற்சியோடு ஒரு விஷயத்தை தொடரும் போது நிச்சயமாக வெற்றியை தரும் என்பதற்கு ஒரு உதாரணமாக இவர் மாறி இருக்கிறார்.

Story Written By: Devika

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+