சுதர்தன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மருந்து, ரசாயனங்கள், பெயிண்ட்ஸ், பிசின் மற்றும் பல்வேறு தொழில்துறைகளுக்கான சிறப்பு ரசாயனங்கள் மற்றும் இடைநிலை பொருட்கள் வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. பங்குச் சந்தையில் நல்ல லாபம் கொடுத்த பங்குகளில் இதுவும் ஒன்றாகும்.
ஸ்மால்கேப் பிரிவை சேர்ந்த சுதர்தன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் பங்கு குறுகிய காலத்தில் முதலீட்டாளர்களுக்கு மல்டிபேக்கர் ஆதாயத்தை கொடுத்துள்ளது. ஒரு வருடத்தில் இப்பங்கு முதலீ்ட்டாளர்களின் செல்வத்தை 420 சதவீதம் அதிகரித்துள்ளது.

2023 மார்ச் மாதத்தில் சுதர்தன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டில் களம் இறங்கியது. புதிய பங்கு வெளியீட்டில் ஒரு பங்கின் விலை ரூ.73 என்று வெளியிட்டது. கடந்த ஆண்டு நவம்பரில், பங்கை பங்கு பிரிப்பு செய்ய போவதாக அறிவித்தது.
10:1 என்ற விகிதத்தில் பங்கினை பிரிக்க போவதாக தெரிவித்தது. அதாவது ரூ.10 முகமதிப்பு கொண்ட ஒரு பங்கினை ரூ.1 முகமதிப்பு கொண்ட 10 பங்குகளாக பிரித்தது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கு முதலீட்டாளர்களுக்கு 142 சதவீதம் ஆதாயம் அளித்தது. கடந்த ஓராண்டில் இப்பங்கின் விலை 420 சதவீதம் அதிகரித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் சுதர்தன் பார்மா இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.99 சதவீதம் குறைந்து ரூ.39.50ஆக இருந்தது. இன்றைய நிலவரப்படி, இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.950.60 கோடியாக இருந்தது.
2024 செப்டம்பர் காலாண்டில், இந்நிறுவனம் வருவாயாக ரூ.225.35 கோடி ஈட்டியுள்ளது. 2024 மார்ச் காலாண்டுடன் ஒப்பிடும்போது இது சிறிது குறைவாகும். மேலும் கடந்த செப்டம்பர் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.5.92 கோடி ஈட்டியுள்ளது. 2024 மார்ச் காலாண்டில் இந்நிறுவனம் நிகர லாபமாக ரூ.6.46 கோடி ஈட்டியிருந்தது.
அண்மையில் இந்நிறுவனம் 43 கோடி வரையிலான முழுமையாக மாற்றத்தக்க வாரண்டுகளை ரூ.1 முக மதிப்புள்ள பங்குகளாக ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட தவணைகளில் ரூ.43.80 என்ற வெளியீட்டு விலையில் வெளியிடுவதாக அறிவித்தது. இந்நிலையில், பங்குச் சந்தை அமைப்பிடம் தாக்கல் செய்த அறிக்கையில், மாற்றத்தக்க வாரண்டுகளின் முன்மொழியப்பட்ட ஒதுக்கீடுகளின் பட்டியலில் திருத்தம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
Story written by: Subramanian
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!



Click it and Unblock the Notifications