சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதியும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் நோக்கிலும், பெட்ரோலில் எத்தனால் கலப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் பெட்ரோலில் அதிகபட்சம் 20 சதவீதம் எத்தனால் கலக்க இலக்க நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோலில் எத்தனால் கலப்பதால் கச்சா எண்ணெய் இறக்குமதி குறைக்கப்பட்டு, பல ஆயிரம் கோடி டாலர் அன்னிய செலாவணி மிச்சமாகிறது மேலும் விவசாயிகளுக்கும் வருமானம் கிடைக்கிறது. கரும்பு உள்ளிட்டவற்றிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.

கடந்த 2022-23 (நவம்பர்-அக்டோபர்) எத்தனால் சப்ளை ஆண்டு முதல், அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட எத்தனால் விலைகள் உயர்த்தப்படவில்லை. கரும்புச்சாறு, பி-ஹெவி மொலாசஸ் மற்றும் சி-ஹெவி மொலாசஸ் ஆகியவற்றிலிருந்து உற்பத்தி செய்யப்படும் எத்தனாலின் தற்போதைய லிலைகள் லிட்டருக்கு முறையே ரூ.65.61, ரூ.60.73 மற்றும் ரூ.56.28ஆக உள்ளது. இதனால் எத்தனால் விலையை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சரவை எத்தனால் விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் வெளியானதையடுத்து சர்க்கரை துறை பங்குகள் விலை ஏற்றம் கண்டன. இஐடி பாரி, ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ், பல்ராம்பூர் சினிமில்ஸ் மற்றும் திரிவேணி என்ஜினீயரிங் போன்ற சர்க்கரை துறை பங்குகள் இன்று ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே இஐடி பாரி நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.66 சதவீதம் உயர்ந்து ரூ.819.75ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே ஸ்ரீ ரேணுகா சுகர்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 6.06 சதவீதம் உயர்ந்து ரூ.37.96ஆக இருந்தது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே பல்ராம்பூர் சினிமில்ஸ் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 4.02 சதவீதம் உயர்ந்து ரூ.498.85ஆக இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே திரிவேணி என்ஜினீயரிங் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 3.96 சதவீதம் உயர்ந்து ரூ.400.25ஆக இருந்தது.
நம் நாடு தற்போது மொத்த பெட்ரொல் விநியோகத்தில் 13 சதவீதம் எத்தனாலை கலக்கிறது. இது ஆகஸ்ட் மாதத்துக்குள் எரிபொருளுக்காக சுமாா 550 கோடி லிட்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எத்தனால் கலப்பு இலக்கை 2025ம் ஆண்டுக்குள் 20 சதவீதமாக அதிகரிக்க அரசாங்கம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
Story written by: Subramaian
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications